என் மலர்

  நீங்கள் தேடியது "Southern Railway"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிக்க தயாராகி வருகின்றனர்.
  • பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவெடுத்துள்ளது.

  சென்னை:

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட முக்கிய நகர பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிக்க தயாராகி வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம் பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படவுள்ளது.

  இந்த நிலையில், தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு கூடுதல் பொங்கல் சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் - நெல்லை அதிவிரைவு சிறப்பு ரயில் (06049) ஜனவரி 14ஆம் தேதியன்று தாம்பரத்திலிருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு நெல்லை வந்து சேரும்.

  அதேபோல், மறு மார்க்கத்தில் நெல்லை- தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06050) நெல்லையில் இருந்து ஜனவரி 18 ஆம் தேதியன்று மாலை 05.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஏப்ரல்-டிசம்பர் மாதத்தில் 46 கோடியே 82 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
  • கடந்த ஆண்டில் இதே கால கட்டத்தில் இந்த எண்ணிக்கை 22 கோடியே 56 லட்சமாக இருந்தது.

  சென்னை:

  தெற்கு ரெயில்வே ஒவ்வொரு அரையாண்டு மற்றும் நிதியாண்டில் முடிந்த 9 மாதங்களில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை, சரக்குகள் கையாண்ட அளவு போன்றவற்றை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது.

  அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 9 மாதத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களில் கணிசமான வளர்ச்சியை எட்டியுள்ளது.

  கடந்த ஆண்டை ஒப்பிடும் போது நடப்பு நிதியாண்டில் பயணிகள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்து உள்ளது. முன்பதிவு செய்த பயணிகள், முன்பதிவு இல்லாத பயணிகள், பயணிகள் ரெயில் மற்றும் பண்டிகைக் கால சிறப்பு ரெயில்கள் மின்சார ரெயில்கள் ஆகியவற்றின் மூலம் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

  ஏப்ரல்-டிசம்பர் மாதத்தில் 46 கோடியே 82 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டில் இதே கால கட்டத்தில் இந்த எண்ணிக்கை 22 கோடியே 56 லட்சமாக இருந்தது. பயணிகள் மூலம் ரூ.4689 கோடி வருவாய் ஈட்டி உள்ளது.

  சரக்கு ரெயில்களை கையாண்டதன் மூலமும் வருவாய் அதிகரித்துள்ளது. 27.660 மில்லியன் எடையளவு கொண்ட சரக்குகள் இந்த 9 மாதத்தில் தெற்கு ரெயில்வே கையாண்டுள்ளது.

  கடந்த ஆண்டு இது 21.757 மில்லியன் ஆக இருந்தது. கடந்த வருடத்தைவிட 27 சதவீதம் சரக்குகள் அதிகளவு கையாளப்பட்டுள்ளன.

  சரக்குகள் அதிகளவில் கையாண்டதன் மூலம் ரூ.25659 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டில் கையாண்ட வருவாயைவிட ரூ.1989 கோடி அதிகமாகும்.

  மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சென்ட்ரல்-மைசூரு (12609) இடையே வருகிற 10-ந்தேதி மதியம் 1.45 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் அரை மணி நேரம் தாமதமாக மதியம் 2.15 மணிக்கு இயக்கப்படும்.
  • சென்ட்ரல்-கோவை (12679) இடையே வருகிற 10-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் 5 நிமிடங்கள் தாமதமாக மதியம் 2.35 மணிக்கு இயக்கப்படும்.

  சென்னை:

  தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

  பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  * சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல்-மங்களூரு (வண்டி எண்-22637) இடையே வருகிற 10-ந்தேதி மதியம் 1.15 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் அரை மணிநேரம் தாமதமாக மதியம் 1.45 மணிக்கு சென்ட்ரலிலிருந்து இயக்கப்படும்.

  * சென்ட்ரல்-மைசூரு (12609) இடையே வருகிற 10-ந்தேதி மதியம் 1.45 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் அரை மணி நேரம் தாமதமாக மதியம் 2.15 மணிக்கு இயக்கப்படும்.

  * சென்ட்ரல்-கோவை (12679) இடையே வருகிற 10-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் 5 நிமிடங்கள் தாமதமாக மதியம் 2.35 மணிக்கு இயக்கப்படும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஐதராபாத்தில் இருந்து வருகிற 29-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 31-ந்தேதி அதிகாலை 3.50 மணிக்கு கோட்டயம் சென்று சேரும்.
  • சிறப்பு ரெயில்கள் அனைத்தும் தமிழகத்தில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

  சென்னை:

  ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகம் வழியாக தெலுங்கானா-கேரளா இடையே சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்து உள்ளது. இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

  ஐதராபாத்தில் இருந்து வருகிற 29-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 31-ந்தேதி அதிகாலை 3.50 மணிக்கு கோட்டயம் சென்று சேரும். மறுமார்க்கமாக வருகிற 31-ந்தேதி இரவு 10.50 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு ஜனவரி 1-ந்தேதி இரவு 9.15 மணிக்கு ஐதராபாத் சென்றடையும்.

  இதேபோல் நர்சாபூரில் இருந்து வருகிற 27-ந்தேதி காலை 11.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் கேரள மாநிலம் கண்ணூருக்கு வருகிற 28-ந்தேதி மாலை 5.15 மணிக்கு சென்று சேரும். மறுமார்க்கமாக வருகிற 28-ந் தேதி இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு 30-ந்தேதி அதிகாலை 6 மணிக்கு நர்சாபூர் சென்றடையும்.

  ஜெகந்திராபாத்தில் இருந்து வருகிற 28-ந்தேதி பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் வருகிற 29-ந்தேதி இரவு 7 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து 29-ந்தேதி இரவு 11 மணிக்கு புறப்பட்டு 31-ந்தேதி அதிகாலை 4.50 மணிக்கு ஜெகந்திராபாத் சென்றடையும்.

  நர்சாபூரில் இருந்து வருகிற 31-ந்தேதி மாலை 4.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், ஜனவரி 1-ந்தேதி மாலை 5 மணிக்கு கேரள மாநிலம் கண்ணூர் சென்று சேரும். மறுமார்க்கமாக ஜனவரி 1-ந்தேதி இரவு 10.55 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்பட்டு 2-ந்தேதி இரவு 11.45 மணிக்கு நர்சாபூர் சென்றடையும்.

  இந்த சிறப்பு ரெயில்கள் அனைத்தும் தமிழகத்தில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

  இந்த தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மைசூரில் இருந்து தூத்துக்குடி மற்றும் மயிலாடுதுறை செல்லும் ரெயில்களின் பெட்டிகள் பழைய ஐ.சி.எப்.பெட்டிகளாக இயங்கி வந்த நிலையில் இன்று முதல் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிவப்பு வண்ண எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது.
  • தென்காசி மாவட்ட பகுதிகளுக்கு முதன்முறையாக கரூர், நாமக்கல், சேலம், பெங்களூரு, மைசூருக்கு ரெயில் இணைப்பு கிடைக்கும்.

  தென்காசி:

  மைசூரில் இருந்து தூத்துக்குடி மற்றும் மயிலாடுதுறை செல்லும் ரெயில்களின் பெட்டிகள் பழைய ஐ.சி.எப்.பெட்டிகளாக இயங்கி வந்த நிலையில் இன்று முதல் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிவப்பு வண்ண எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது.

  எனவே இந்த நான்கு ெரயில்களின் பழைய ரெயில் பெட்டி தொடர்களைக் கொண்டு மைசூரில் இருந்து பெங்களூரு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், அம்பை வழியாக நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

  மைசூர்-தூத்துக்குடி-மைசூர் மற்றும் மைசூர் - மயிலாடுதுறை - மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 23 பெட்டிகளுடன், பெட்டிகள் பகிர்வு முறையில் இயங்கி வந்தன.

  இந்த இரண்டு ரெயில் பெட்டி தொடர்களின் பராமரிப்பும் மைசூர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வண்டி தென்மேற்கு ரெயில்வேக்கு சொந்தமான வண்டி ஆகும்.

  தற்போது இந்த 2 ரெயில்களின் பெட்டி தொடர்கள் அதிநவீன ஜெர்மன் தொழில்நுட்பம் கொண்ட எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது.

  எனவே இந்த இரண்டு ரெயில்களின் 4 ெரயில் பெட்டி தொடர்களில் உள்ள 92 ெரயில் பெட்டிகளில் நல்ல பெட்டிகளை தேர்ந்தெடுத்து 18 பெட்டிகளை பயன்படுத்தி நாமக்கல், மதுரை, தென்காசி வழியாக நெல்லைக்கு இயக்க சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது.

  இது குறித்து தென் மாவட்ட ரெயில் பயணிகள் கூறுகையில், மதுரை ரெயில்வே கோட்டத்தில் மிக முக்கிய வழித்தடமான விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், அம்பை. நெல்ைல வழித்தடத்தில் 3 மாவட்டங்கள் பயன்பெறும் மிக முக்கிய நகரங்கள் உள்ளன. இந்த வழித்தடத்தில் பெங்களூருக்கு ரெயில்கள் வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

  தற்போது அதற்கான நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. மைசூர் - தூத்துக்குடி, மயிலாடுதுறை ரெயில்களின் பழைய ெரயில் பெட்டிகளை பயன்படுத்தி உடனடியாக மைசூர் - நெல்லை வழி பெங்களூரு, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, ராஜபாளையம், தென்காசி அம்பை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும். இதன் மூலம் தென்காசி மாவட்ட பகுதிகளுக்கு முதன்முறையாக கரூர், நாமக்கல், சேலம், பெங்களூரு, மைசூருக்கு ரெயில் இணைப்பு கிடைக்கும்.

  எனவே மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக தெற்கு ரெயில்வே மற்றும் தென்மேற்கு ரெயில்வே பொது மேலாளர்களுக்கு கடிதம் எழுதியும் நேரில் வலியுறுத்தியும் இந்த ரெயிலை பெற்று தர வேண்டும்.

  இவ்வாறு அவர்கள் கூறினர்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிலம்பு எக்ஸ்பிரஸை தினசரியாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
  • ஐதராபாத் - தாம்பரம் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலை மதுரை நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

  சங்கரன்கோவில்:

  தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளருமான ராஜா எம்.எல்.ஏ., தெற்கு ரெயில்வே புதிய பொது மேலாளர் ஆர். என். சிங்கை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.அதில் கூறியுள்ளதாவது:-

  நெல்லையில் இருந்து தென்காசி, சங்கரன்கோவில் வழியாக இயங்கும் தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில்களை நிரந்தர ரெயில்களாக இயக்க வேண்டும். சிலம்பு எக்ஸ்பிரஸை தினசரியாக மாற்ற வேண்டும்.

  நெல்லையில் இருந்து தென்காசி, சங்கரன்கோவில், மதுரை, பெங்களூர் வழியாக மைசூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்க வேண்டும். ஐதராபாத் - தாம்பரம் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலை மதுரை நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். தமிழகத்திற்கு பயனில்லாமல் இயக்கப்படும் திப்ரூகர் - கன்னியாகுமரி ரெயிலை மதுரை, நெல்லை வழியாக இயக்க வேண்டும்.

  நெல்லை, தாம்பரம் ரெயிலுக்கு சங்கரன்கோவில் ரெயில் நிறுத்தமும், நெல்லை, பாலக்காடு பாலருவி ரெயிலுக்கு பாவூர்சத்திரம் ரெயில் நிறுத்தமும் வழங்க வேண்டும். முருக பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்செந்தூர் ரெயில் நிலையத்தின் நடைமேடைகளை நீட்டித்து, கூடுதல் நடை மேடைகளுடன் கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும்.

  இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

  இதுகுறித்து ராஜா எம்.எல்.ஏ. கூறுகையில், அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படுவதாக பொது மேலாளர் கூறினார். தென்காசி, சங்கரன்கோவில் வழியாக பெங்களூரு, மைசூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கவும், திருச்செந்தூர் ரெயில் நிலையத்தை மேம்படுத்தும் பணியும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று பொது மேலாளர் கூறினார் என தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெளியூர் பயணத்தின்போது, ஆங்காங்கே பிரபலமான உணவுகளை பெறும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
  • சதாப்தி, ராஜ்தானி போன்ற ரெயில்களில் பயணிகளுக்கான கட்டணத்தில் உணவுக்கான கட்டணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

  சென்னை:

  தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

  ரெயில் பயணத்தின்போது, பயணிகளுக்கான உணவுகளை வழங்க ரெயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. உணவு விநியோக சேவையை மேம்படுத்தும் வகையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகை கள், பருவகால உணவு வகைகள், பண்டிகைகால உணவுகள் என பல்வேறு தொகுப்பு உணவுகளை ஐஆர்சிடிசி (இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்)யின் இணைய தளம் அல்லது செயலி வாயிலாக பெறலாம்.

  வெளியூர் பயணத்தின்போது, ஆங்காங்கே பிரபலமான உணவுகளை பெறும் வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு, குழந்தைகளுக்கான உணவு, சிறு தானிய அடிப்படையிலான உள்ளூர் தயாரிப்புகள் உள்ளிட்ட ஆரோக்கியம் சார்ந்த உணவு என பயணிகள் தாங்கள் விரும்பிய உணவுகளை தேர்வு செய்யலாம். சதாப்தி, ராஜ்தானி போன்ற ரெயில்களில் பயணிகளுக்கான கட்டணத்தில் உணவுக்கான கட்டணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. முன்கூட்டியே உணவுக்கான கட்டணம் செலுத்தியும் பெறலாம்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் இன்று அதிகாலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது.
  • 5 விரைவு ரெயில்களும் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக சென்னைக்கு சென்றுள்ளது.

  விழுப்புரம்:

  விழுப்புரம் ரெயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. இந்த வழியாக ஏராளமான ரெயில்கள் தென் மாவட்டங்களுக்கு சென்று வருகிறது.

  விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் இன்று அதிகாலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லக்கூடிய பொதிகை, முத்துநகர், சேது எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி விரைவு ரயில், அனந்தபுரி, ஆகிய 5 விரைவு ரெயில்களும் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக சென்னைக்கு சென்றுள்ளது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சபரிமலையில் பண்டிகை காலம் நெருங்குவதையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
  • வாராந்திர சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

  சென்னை:

  தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

  சபரிமலையில் பண்டிகை காலம் நெருங்குவதையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க கீழ்க்கண்ட வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:

  * சென்னை எழும்பூர்-கொல்லம் (06061) இடையே புதன்கிழமைகளில் மதியம் 3.30 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 16, 23, 30-ந்தேதிகளிலும், டிசம்பர் மாதம் 7, 14, 21, 28-ந்தேதிகளிலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4, 11, 18, 25-ந்தேதிகளிலும் இயக்கப்படும்.

  * கொல்லம்-எழும்பூர் (06062) இடையே வியாழக்கிழமைகளில் காலை 8.45 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 17, 24-ந்தேதிகளிலும், டிசம்பர் மாதம் 1, 8, 15, 22, 29-ந்தேதிகளிலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5, 12, 19, 26-ந்தேதிகளிலும் இயக்கப்படும்.

  * எழும்பூர்-கொல்லம் (06063) இடையே வெள்ளிக்கிழமைகளில் மதியம் 2.30 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 18, 25-ந்தேதிகளிலும், டிசம்பர் மாதம் 2, 9, 16, 23, 30-ந்தேதிகளிலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6, 13, 20, 27-ந்தேதிகளிலும் இயக்கப்படும்.

  * கொல்லம்-எழும்பூர் (06064) இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.45 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 20, 27-ந்தேதிகளிலும், டிசம்பர் மாதம் 4, 11, 18, 25-ந்தேதிகளிலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1, 8, 15, 22, 29-ந்தேதிகளிலும் இயக்கப்படும்.

  * எழும்பூர்-கொல்லம் (06065) இடையே திங்கட்கிழமைகளில் மதியம் 3.30 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 21, 28-ந்தேதிகளிலும், டிசம்பர் மாதம் 5, 12, 19, 26-ந்தேதிகளிலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2, 9, 16, 23-ந்தேதிகளிலும் இயக்கப்படும்.

  * கொல்லம்-எழும்பூர் (06066) இடையே செவ்வாய்க்கிழமைகளில் காலை 8.45 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 22, 29-ந்தேதிகளிலும், டிசம்பர் மாதம் 6, 13, 20, 27-ந்தேதிகளிலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3, 10, 17, 24-ந்தேதிகளிலும் இயக்கப்படும்.

  இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கப்படுகிறது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாய்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான முழு பொறுப்பும் பயணிகளுடையது.
  • நாய்க்கு தண்ணீர் மற்றும் உணவுக்கான ஏற்பாடுகளை உரிமையாளர்தான் செய்ய வேண்டும்.

  சென்னை:

  ரெயில்வேயில் உள்ள வசதிகள், ரெயில்கள் இயக்கம், தொழில்நுட்பம், பாதுகாப்பு தொடர்பாக பயணிகளிடம் விளக்கும் வகையில் 'உங்கள் ரெயில்வே பற்றி தெரிந்து கொள்ளுங்கள்' என்ற தலைப்பில் தெற்கு ரெயில்வே தகவல்களை வெளியிட்டு வருகிறது.

  இந்த நிலையில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகள், விலங்குகள், பறவைகளை ரெயிலில் எடுத்து செல்வதற்காக உள்ள வசதிகள் குறித்து தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

  யானை, குதிரை, கழுதை, செம்மறி ஆடு, நாய் உள்ளிட்ட பிற விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றை ரெயில்களில் ஏற்றிச் செல்லலாம். அவற்றை ஏற்றிச்செல்வதற்கான விவரங்களை ரெயில் நிலையங்களில் பெறலாம்.

  மற்ற விலங்குகளை விட வீடுகளில் செல்லமாக வளர்க்கப்படும் நாய், பூனை போன்றவற்றை பயணிகள் ரெயில்களில் தங்களுடன் அழைத்துச்செல்ல விரும்புகிறார்கள். செல்லப் பிராணியான நாய்களை முதல் ஏசி வகுப்பிலும், ரெயில் மேலாளரின் மேற்பார்வையின் கீழ் லக்கேஜ் மற்றும் பிரேக் வேனில் எடுத்துச் செல்லவும் பதிவு செய்யலாம்.

  பயணிகள் தாங்கள் பயணிக்கும் பெட்டியில் நாயை அழைத்துச் செல்ல ஏசி முதல் வகுப்பு, கூபே தங்குமிடத்தை பிரத்தியேகமாக முன்பதிவு செய்ய வேண்டும். பயணியின் ஒரு டிக்கெட்டில் ஒரு நாய் மட்டுமே அனுமதிக்கப்படும். இதற்காக கட்டணமும் வசூலிக்கப்படும்.

  ரெயில் புறப்படுவதற்கு 3 மணிநேரத்துக்கு முன்பு நாயை லக்கேஜ் அல்லது பார்சல் அலுவலகத்துக்கு அழைத்து வர வேண்டும். பொது பயணிகள் பெட்டிகளில் நாயை கொண்டு செல்ல அனுமதி இல்லை. முறையாக முன்பதிவு செய்யாமல் நாய்களை ஏற்றிச்சென்றால் 6 மடங்கு லக்கேஜ் கட்டணம் விதிக்கப்படும்.

  எந்த தொற்று நோய்களாலும் நாய் பாதிக்கப்படவில்லை என்று கால்நடை மருத்துவரிடம் பயணத்திற்கு 24 மணி முதல் 48 மணி நேரத்திற்கு முன்பு சான்றிதழ் பெற வேண்டும். முன்பதிவு செய்யும் போது தடுப்பூசி அட்டைகளை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

  நாய்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான முழு பொறுப்பும் பயணிகளுடையது. நாய்க்கு தண்ணீர் மற்றும் உணவுக்கான ஏற்பாடுகளை உரிமையாளர்தான் செய்ய வேண்டும்.

  அனைத்து ரெயில்பெட்டிகளிலும் நாய்களை கூடைகளில் எடுத்து செல்லலாம். அதற்காக பயணிகள், உறுதி செய்யப்பட்ட டிக்கெட் மற்றும் சரியான அடையாள சான்று வைத்திருக்க வேண்டும்.

  நாயை ஏற்றி பெட்டிக்குள் அடைக்கும் முன்பு அதன் உரிமையாளர் நாயை வாய் காப்புடன் சரியாக சங்கிலியால் பிணைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

  இவ்வாறு தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சென்னை சென்டிரல்-மங்களூரு இடையே மதியம் 1.15 மணிக்கு ‘வெஸ்ட் கோஸ்ட்‘ எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.
  • ‘வெஸ்ட் கோஸ்ட்‘ எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து 45 நிமிடம் காலதாமதமாக மதியம் 2 மணிக்கு இயக்கப்படும்.

  சென்னை:

  தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

  பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  * சென்னை சென்டிரல்-மங்களூரு இடையே மதியம் 1.15 மணிக்கு இயக்கப்படும் 'வெஸ்ட் கோஸ்ட்' எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (சனிக்கிழமை), 25-ந்தேதி மற்றும் 29-ந்தேதிகளில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து 45 நிமிடம் காலதாமதமாக மதியம் 2 மணிக்கு இயக்கப்படும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.