செய்திகள்
நுண்ணீர் பாசன திட்டம்

நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.8.68 கோடி மானியம்

Published On 2020-06-15 14:58 GMT   |   Update On 2020-06-15 14:58 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆயிரத்து 679 ஹெக்டேர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.8.68 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தில் தென்னை, கரும்பு, பருத்தி, மக்காச்சோளம், நிலக்கடலை, துவரை மற்றும் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, ஆயிரத்து 679 ஹெக்டேர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.8.68 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதில் தெளிப்பு நீர் கருவிகள், மழைத்தூவுவான் ஆகியவற்றை சிறு-குறு விவசாயிகள் 100 சதவீத மானியத்திலும், பெரிய விவசாயிகள் 75 சதவீத மானியத்திலும் பெறலாம்.

கிணறுகளில் இருக்கும் குறைந்த நீரை கொண்டு செய்யப்படும் நுண்ணீர் பாசனம் மூலம், 30-40 சதவீத நீரை மிச்சப்படுத்தலாம். நீரில் கரையும் உரங்கள் மூலம் 20 சதவீத மகசூல் கூடுதலாக பெறலாம். இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை, சிறு- குறு விவசாயிகளுக்கான சான்று, அடங்கல், கணினி சிட்டா ஆகிய ஆவணங்களுடன், அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலர்களை அணுகலாம். மேலும் www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலும் நேரடியாக பதிவு செய்யலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News