search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுண்ணீர் பாசன திட்டம்"

    • நடப்பு ஆண்டில் 152 ஹெக்டேர் பரப்பில் நுண்ணீர் பாசன திட்டம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    கடையம்:

    கடையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொறுப்பு) கோபி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நுண்ணீர் பாசன திட்ட மானியம்

    கடையம் வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் 152 ஹெக்டேர் பரப்பில் நுண்ணீர் பாசன திட்டம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழைத்துவான் பாசனம் வழங்கப்பட உள்ளது.

    சிறு, குறு விவசாயிகளுக்கு 2 ஹெக்டேர் வரையிலும் இதர விவசாயிகளுக்கு 5 ஹெக்டேர் வரையிலுமாக வழங்கப்படுகிறது.

    சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பயிரிடும் தோட்டக்கலை பயிர்களை அடங்களில் பதிவு செய்து, குடும்ப அட்டை நகல், கணினி சிட்டா, ஆதார் அட்டைநகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், நில வரைபடம், சிறு, குறு விவசாயிகளாக இருப்பின் அதற்கான தாசில்தாரிடம் பெறப்பட்ட இணையதள சான்று உள்ளிட்ட அனைத்தையும் கடையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் கொடுத்து பயன்பெறலாம்.

    திட்டத்தின் வாயிலாக 7 ஆண்டுகளுக்கு முன் மானியம் பெற்ற விவசாயிகளுக்கு புதிதாக சொட்டுநீர் பாசனம் இந்த நிதி ஆண்டில் அமைத்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×