செய்திகள்
போராட்டம்

தஞ்சையில் ஏ.ஐ.டி.யூ.சி. கருப்பு கொடி ஏந்தி போராட்டம்

Published On 2020-05-22 11:21 GMT   |   Update On 2020-05-22 11:21 GMT
12 மணி நேரப் பணியை கண்டித்து தஞ்சையில் ஏ.ஐ.டி.யூ.சி.வினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர்:

8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற கூடாது, பொது துறையை தனியார் மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் ஏ.ஐ.டி.யூ.சி.வினர் மாவட்ட அலுவலகம் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

இதற்கு மாவட்ட செயலாளர் தில்லைவனம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட தலைவர் சேவையா, பொருளாளர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கோரிக்கைகள் வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது. அரசு போக்குவரத்து கழக மாநில துணை செயலாளர் துரை.மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதே கோரிக்கைகள் வலியுறுத்தி தஞ்சை மின் வாரிய மேற்பார்வை அலுவலகம் முன்பு மின்கல தொழிலாளர் முன்னனி, முன்னேற்ற சங்க பேரவை, மின்வாரியம் சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மற்றும் மாவட்டத்தில் உள்ள 150 வங்கிகள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News