செய்திகள்
தமிழக அரசு

கொரோனா நிவாரண பணிக்கு இதுவரை ரூ.367 கோடி நிதி- தமிழக அரசு

Published On 2020-05-15 07:52 GMT   |   Update On 2020-05-15 07:52 GMT
கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.367 கோடி நிதி வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும்  நிவாரண பணிகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிவாரணப் பணிகளுக்கென முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசு சார் நிறுவன ஊழியர்கள், அரசு சார் வாரியங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து இதுவரை ரூ.367 கோடி நிதிக்கு வந்துள்ளது.

கொரோனா நிவாரண நிதி அளித்த நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், தொடர்ந்து அரசுக்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்கள்.

மேலும் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ஆதரவாக, தங்களது ஒரு நாள் ஊதியத்தை மனமுவந்து அளித்த அரசு ஊழியர்களுக்கும், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் முதலமைச்சர் நன்றி தெரிவித்துக்கொண்டார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News