செய்திகள்
கமல்ஹாசன்

ரூ.20 லட்சம் கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள் - பிரதமர் அறிவிப்புக்கு கமல் வரவேற்பு

Published On 2020-05-12 21:35 GMT   |   Update On 2020-05-12 21:35 GMT
பிரதமர் மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் திட்டங்களில் ஏழைகளுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்பதை எதிர்பார்ப்பேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுள்ளது. ஊரடங்கு உத்தரவு மே 17-ம் தேதி நிறைவுக்கு வரும் நிலையில் பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். 
 
அப்போது அவர் கூறுகையில், வலிமையான இந்தியாவை உருவாக்க இதுவே சிறந்த தருணம். நாம் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

20 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பு திட்டங்கள். இந்த பொருளாதார வளர்ச்சி திட்டத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்கம் கிடைக்கும் என தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் திட்டங்களில் ஏழைகளுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்பதை எதிர்பார்ப்பேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நீங்கள் கூறிய இரு விஷயங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

முதலாவது ஏழை மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் பொருளாதார ரீதியாக வலுவடைய வேண்டும். மற்றொன்று பொருளாதாரத்தை மீட்க அறிவிக்கப்பட்ட சிறப்புத் திட்டங்கள்.

இந்த அறிவிப்பின் பலன்கள் நமது நாட்டில் உள்ள ஏழைகளுக்கு எப்படி கிடைக்கப் போகிறது என்பதை நான் எதிர்பார்ப்பேன் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News