செய்திகள்
மளிகை பொருட்கள்

திருவண்ணாமலையில் ரூ.500க்கு மளிகை பொருட்கள் பொட்டலம் போடும் பணி தீவிரம்

Published On 2020-04-30 11:32 GMT   |   Update On 2020-04-30 11:32 GMT
திருவண்ணாமலையில் ரூ.500க்கு மளிகை பொருட்கள் பொட்டலம் போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் போடப்படும் பொட்டலங்கள் ரேசன் கடைகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை:

தமிழக அரசு ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.500க்கு மளிகை பொருட்கள் அடங்கிய பொட்டலங்களை வழங்கி வருகிறது.

இதில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், புளி, பொட்டுக்கடலை, வரமிளகாய், மல்லி, மஞ்சள் தூள், டீ தூள், உப்பு, பூண்டு, சமையல் எண்ணெய், சோப்பு மிளகாய்த்தூள் உள்ளிட்ட 19 வகையான பொருட்கள் உள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 45 ஆயிரம் குடும்பத்தினருக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கு அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பொட்டலம் போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தினமும் போடப்படும் பொட்டலங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு சென்று ரேசன் கடைகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணியை மேலாண்மை இயக்குனர் மீனாட்சிசுந்தரம் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News