செய்திகள்
முக ஸ்டாலின்

அரசு ஊழியர்கள் சம்பளம் மீதான தாக்குதல் வேதனைக்குரியது - முக ஸ்டாலின் கண்டனம்

Published On 2020-04-28 10:27 GMT   |   Update On 2020-04-28 10:27 GMT
அரசு ஊழியர்களின் மாத சம்பளம் மீது தாக்குதல் தொடுத்து ஆணை வெளியிட்டிருப்பது மிகவும் வேதனைக்கு உரியது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:

கொரோனா தடுப்பு பணிக்கு ஏராளமான நிதி தேவைப்படுவதால் அகவிலைப்படி நிறுத்தம், பி.எப். வட்டி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. 

இதுதொடர்பாக, திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக அரசின் நடவடிக்கை ஊழியர்களின் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் இழக்க வைத்து மனதளவில் சோர்வடையச் செய்யும்.

அரசு ஊழியர்களின் மாத சம்பளம் மீது தாக்குதல் தொடுத்து ஆணை வெளியிட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியது, கண்டனத்திற்கு உரியது.

அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி, அவர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது.

எனவே அகவிலைப்படி ரத்து, ஈட்டிய விடுப்பு உரிமை ரத்து போன்ற அரசாணைகளை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

Similar News