செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா பாதிப்பு வெப்பநிலை குறைந்த இடங்களில் தீவிரமாகும்: சென்னை ஐஐடி தகவல்

Published On 2020-04-27 07:00 GMT   |   Update On 2020-04-27 08:11 GMT
கொரோனா வைரஸ் தொற்றானது வெப்பநிலை குறைந்த இடங்களில் தீவிரமாக பரவும் என்றும் சென்னை ஐ.ஐ.டி தெரிவித்துள்ளது.

சென்னை:

கொரோனா நோய் தொற்றானது வெப்பநிலை குறைந்த இடங்களில் தீவிரமாக பரவுமா என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் சச்சின் குந்தே தலைமையிலான குழு ஆய்வு செய்தது. இதில் வெப்பநிலை மற்றும் புறஊதா கதிர்வீச்சு அதிகமுள்ள பகுதிகளில் கொரோனா கட்டுக்குள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கையாக புறஊதா கதிர்வீச்சை உருவாக்கினால் சமூக பரவலை தடுக்கலாம். உலகம் முழுவதும் 1.7 லட்சம் பேரின் தரவுகளை ஆராய்ந்து, இந்த முடிவுகளை ஐ.ஐ.டி. வெளியிட்டுள்ளது.

தரவுகளை மட்டுமே ஆராய்ந்து இருப்பதால் உடலியல் ஆய்வை முன்னெடுத்த பின்பே நிரூபணம் செய்யப்படும் என்றும், வெப்பநிலை குறைந்த இடங்களில் கொரோனா தீவிரமாக பரவும் என்றும் சென்னை ஐ.ஐ.டி தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News