செய்திகள்
மூதாட்டி மரணம்

கமுதி அருகே மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு

Published On 2020-04-24 12:14 GMT   |   Update On 2020-04-24 12:14 GMT
கமுதி அருகே மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கமுதி:

கமுதி அருகேயுள்ள நாராயணபுரத்தை சேர்ந்த மூதாட்டி அழகம்மாள் (75). இவர் அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டையில் உள்ள பேரன் வீட்டில் இருந்தபோது, நேற்று முன்தினம் மாலை வயது முதிர்வு காரணமாக இறந்தார்.

மூதாட்டியின் உடலை ஆம்புலன்ஸ் வேனில்ஏற்றி பெருநாழி அருகே திம்ம நாதபுரத்தை சேர்ந்த உறவினர்கள் 11 பேருடன், கமுதி அருகே நாராயணபுரத்தில் அடக்கம் செய்ய கமுதிக்கு வந்தனர்.

இறந்த மூதாட்டி, மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உறவினர்கள் உட்பட 13 பேருக்கும், பரிசோதனை செய்து, கொரோனா பாதிப்பு இல்லை என, சுகாதாரதுறையினர் உத்திரவாதம் அளித்தால்தான், நாராயணபுரத்தில் அடக்கம் செய்ய முடியும் என, கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதனால் மூதாட்டியின் உடல் கமுதி அரசு மருத்து வமனையில் வைக்கப்பட்டு, போலீஸ், வருவாய்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மூதாட்டியின் உறவினர்கள் 11 பேருக்கு பெரு நாழி ஆரம்ப சுகா தார நிலையத்தில் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, திம்ம நாதபுரத்தில் அவர்களின் வீடுகளில் தனிமைபடுத்தபட்டனர். இதனால் உறவினர்கள் இறுதிசடங்கில் கலந்து கொள்ளாமல், குறைந்த எண்ணிக்கையிலான கிராமத்திலுள்ள நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

Tags:    

Similar News