செய்திகள்
கிளீனிக்

கிளீனிக்குகள் மூடப்பட்டதால் சிகிச்சைக்கு வழியின்றி தவிக்கும் பொதுமக்கள்

Published On 2020-04-24 11:58 GMT   |   Update On 2020-04-24 11:58 GMT
திருச்சியில் சிறிய கிளீனிக்குகள் மூடப்பட்டதால் சிகிச்சைக்கு வழியின்றி தவிக்கும் பொதுமக்கள் கிளீனிக்குகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி:

கொரானா வைரஸ் ஊரடங்கு உத்தரவில் மருத்துவமனைகள், மருந்துக்கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருச்சி மாநகரில் சிறிய கிளீனிக்குகள் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளன.

சாதாரண காய்ச்சல், சளி, இருமல், தலைவலி உள்ளிட்டவை ஏற்பட்டால் பெரும்பாலான பொதுமக்கள் சிறிய கிளீனிக்குகளுக்கு சென்று தான் சிகிச்சை பெறுவார்கள். வீடுகளின் அருகே இருப்பதால் அவர்களுக்கு அந்த கிளீனிக்குகள் பயனுள்ளதாக அமைந்திருந்தது.

தற்போது ஊரடங்கால் மூடப்பட்டுள்ளன. இதனால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் உடனே சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியே சென்றால் போலீசில் சிக்கி விடுவோம் என்று பயந்து நோயுடன் அவதிப்பட்டு வருகின்றனர்.

சிலர் அவர்களாகவே கைவைத்தியம் பார்த்துக் கொள்கின்றனர். இது அவர்கள் உடல்நிலை மேலும் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே சிறிய கிளீனிக்குகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News