செய்திகள்
மாயம்

கோவை: கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற பெண் திடீர் மாயம்

Published On 2020-03-27 11:51 GMT   |   Update On 2020-03-27 11:51 GMT
கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற பெண் திடீரென மாயமானார். பஸ் நிறுத்தத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

கோவை:

கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கோவையை சேர்ந்த மாணவி மற்றும் திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஆகிய 2 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர மேலும் 30 பேர் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் திடீரென மாயமானார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து போலீசார் தப்பியோடிய பெண்ணை தீவிரமாக தேடினர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் அந்தப் பெண் பதுங்கி இருந்தார்.

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை மடக்கிப் பிடித்தனர். பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு மீண்டும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் சிகிச்சை வார்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News