செய்திகள்
கோப்பு படம்.

ஏப். 2-ந்தேதி முதல் ரேஷன் கார்டுக்கு ரூ. 1000 வழங்கப்படும்: தமிழக அரசு

Published On 2020-03-26 15:03 GMT   |   Update On 2020-03-26 15:03 GMT
தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு தலா ரூ. 1000 ஏப். 2-ந்தேதி முதல் 15 ந்தேதி வரை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:

கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு தலா ரூ. 1000 வழங்குவது ஏப். 2-ந்தேதி முதல் 15 ந்தேதி வரை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரையும் விலையின்றி வழங்கப்படும். 

ரேஷன் கடை ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 200 பயணம் செலவினமாக வழங்க வேண்டும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு தேவையான மாஸ்க், கிருமிநாசினிகளை வழங்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News