செய்திகள்
கொரோனா வைரஸ்

விருதுநகர்-சிவகங்கை-ராமநாதபுரம் மாவட்டங்களில் பஸ்கள் ஓடினாலும் பயணத்தை தவிர்த்த பொதுமக்கள்

Published On 2020-03-23 05:05 GMT   |   Update On 2020-03-23 05:05 GMT
விருதுநகர்-சிவகங்கை-ராமநாதபுரம் மாவட்டங்களில் பஸ்கள் வழக்கம்போல் ஓடினாலும் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

விருதுநகர்:

கொரோனாவை எதிர்த்து நாடு முழுவதும் நேற்று சுய ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு அத்தியா வசிய தேவைகளை தவிர்த்து வேறு எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

பஸ்கள், ரெயில்களும் இயக்கப்படவில்லை. லாரிகள், ஆட்டோக்கள் இயங்க வில்லை. இதனால் நாடு முழுவதும் வெறிச் சோடியது. இதற்கிடையில் இரவு 9 மணி வரை மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்த மக்கள் ஊரடங்கு இன்று காலை 5 மணி வரை நீடிக் கப்பட்டது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், ஈரோடு மாவட்டங்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக வும் அறிவிக்கப்பட்டு 3 மாவட்டங்களோடு, நாடு முழுவதும் 80 மாவட் டங்களுக்கு இந்த நிலை நீடிக்கப்பட்டது.

வருகிற 31-ந்தேதி வரை அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. இன்று காலை 5 மணியோடு மக்கள் ஊரடங்கு முடிவுக்கு வந்த நிலையில் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டத் தில் காலையிலேயே பஸ்கள் பணிமனையில் இருந்து வெளிவரத் தொடங்கின. ஆனால் கொரோனா பீதியால் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட் டது.

சிவகங்கை மாவட்டத் திலும் இதேநிலை தான் நீடித்தது. பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டாலும் அதில் பயணம் செய்த வர்களின் எண்ணிக்கை குறைவுதான்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் 418 அசு பஸ்கள், 121 தனியார் பஸ்கள், 94 மினி பஸ்கள் இயக்கப்பட்டன. வழக்கம்போல் சிறிய மற்றும் பெரிய ஓட்டல்கள், கடைகள் திறக்கப்பட்டன. பஸ் நிலையத்தில் வழக்கம்போல் பஸ்கள் வந்தாலும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.

Tags:    

Similar News