செய்திகள்
கைது

ஆவடியில் உறவினரின் குழந்தையை கடத்திய வடமாநில வாலிபர் கைது

Published On 2020-03-18 09:57 GMT   |   Update On 2020-03-18 09:57 GMT
ஆவடியில் பணத்திற்கு ஆசைப்பட்டு உறவினரின் குழந்தையை கடத்திய வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆவடி:

மத்திய பிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட தம்பதியர் ராபிஷ்யாம், ராக்கி. இவர்களது மகன் ஆதேஷ் (2), இவர்கள் ஆவடி அடுத்த சேக்காடு, செந்தமிழ் நகரில் வசித்து வருகின்றனர்.

ராபிஷ்யாம் ஆவடி சுற்று வட்டார பகுதிகளில் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார்.

இந்த வேலைக்கு உதவியாளராக 10 நாட்களுக்கு முன், அவரது உறவினரான உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சனிகுமார் (22) என்பவர் அவரது வீட்டில் தங்கியுள்ளார். நேற்று மதியம் குழந்தைக்கு சாக்லெட் வாங்கித் தருவதாக சனிகுமார் குழந்தையை அழைத்து சென்றார். ஆனால் அதன்பின் சனிகுமார் குழந்தையோடு மாயமானார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராபிஷ்யாம் பல்வேறு இடங்களில் குழந்தையை தேடினார்.

சனிகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் ஒரு லட்சம் ரூபாயை தனது வங்கிக் கணக்கில் உடனடியாகச் செலுத்தா விட்டால் குழந்தையை விட மாட்டேன் என மிரட்டியுள்ளார். இதனால் குழந்தையின் பெற்றோர் ஆவடி காவல் நிலையத்தில் நேற்று இரவு 9 மணி அளவில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து விசாரித்த ஆவடி போலீஸ் இன்ஸ்பெக் டர் காளிராஜ் செல்போன் சிக்னலை பயன்படுத்தி ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் இருந்து அதிகாலை 4 மணி அளவில் குழந்தையை பத்திரமாக மீட்டனர். அதைத்தொடர்ந்து சனிகுமாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News