செய்திகள்
காய்ச்சல் கண்டறியும் பரிசோதனை

தலைமை செயலகம்-சட்டசபைக்கு வருவோருக்கு தீவிர சோதனை

Published On 2020-03-17 06:28 GMT   |   Update On 2020-03-17 06:28 GMT
தலைமை செயலகம் மற்றும் சட்டசபைக்கு வரும் அனைவருக்கும் காய்ச்சல் கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவர்களும், சுகாதார துறையினரும் தயார் நிலையில் இருந்தனர்.
சென்னை:

கொரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சட்டசபை வளாகம், தலைமை செயலக வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கோட்டைக்கு வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. எம்.எல்.ஏ.க்கள் வரும் இடங்களில் கிருமி நாசினி வைக்கப்பட்டு, கைகளை சுத்தம் செய்தனர்.

மேலும் அங்கு 2 வாளிகள் வைக்கப்பட்டிருந்தது. ஒரு வாளியில் தண்ணீரும் மற்றொரு வாளியில் சோப்பு தண்ணீரும் வைத்திருந்தனர். தேவைப்படுபவர்கள் அதில் கைகளை சுத்தம் செய்தனர்.

தலைமை செயலகம் மற்றும் சட்டசபைக்கு வரும் அனைவருக்கும் காய்ச்சல் கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவர்களும், சுகாதார துறையினரும் தயார் நிலையில் இருந்தனர்.

சட்டசபைக்கு வெளியே நான்கு புறமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. சட்டசபைக்கு நிகழ்ச்சிகளை பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் சட்டசபை வளாகத்தில் கூட்டம் குறைவாக இருந்தது.

Tags:    

Similar News