search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமை செயலகம்"

    • போலீசார் தலைமை செயலகத்தில் இன்று காலை 2 மணி நேரத்துக்கும் மேலாக அதிரடி சோதனை நடத்தினர்.
    • வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் பிரகாஷ் என்பது தெரிய வந்தது.

    சென்னை:

    சென்னையில் உள்ள தனியார் தொலைகாட்சிக்கு இன்று காலை 7.30 மணி அளவில் மர்ம போன் ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் சென்னையில் உள்ள தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார். இதுபற்றி தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து போலீசார் தலைமை செயலகத்தில் இன்று காலை 2 மணி நேரத்துக்கும் மேலாக அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

    வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் பிரகாஷ் என்பது தெரிய வந்தது.

    மனநலம் பாதிக்கப்பட்ட அவர் சென்னை வானகரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தலைமை செயலகத்துக்கு வந்த அவர்கள் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
    • சில நேரங்களில் ரித்திக் தனியாக சென்று வீடியோ எடுத்து அதனை சமூகவலை தளங்களில் வெளியிட்டு வந்தார்.

    சென்னை:

    செங்கல்பட்டைச் சேர்ந்தவர் ரித்திக். இவர் ஜார்ஜியா நாட்டில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களோடு ஜார்ஜியாவில் தங்கி இருந்து படித்து வரும் ரித்திக் அந்நாட்டில் உள்ள மலை மற்றும் காட்டுப் பகுதிக்கு சென்று வீடியோ எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

    சில நேரங்களில் ரித்திக் தனியாக சென்று வீடியோ எடுத்து அதனை சமூக வலை தளங்களில் வெளியிட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரித்திக் வழக்கம் போல காட்டுக்குள் சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மாணவன் ரித்திக் மலைப்பகுதிக்கு சென்ற இடத்தில் என்ன ஆனார்? அவரது கதி என்ன? என்பது தெரியவில்லை.

    இதுதொடர்பாக ஜார்ஜியாவில் உள்ள ரித்திக்கின் நண்பர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரித்திக்கின் பெற்றோர் மகனின் நிலை என்ன ஆனது? என்பது தெரியாமல் கலங்கிப் போய் உள்ளனர்.

    இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்து முறையிட முடிவு செய்தனர்.

    இதற்காக தலைமை செயலகத்துக்கு வந்த அவர்கள் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தங்களது மகன் மாயமாகி 4 நாட்களுக்கு மேலாகியும் அவனைப் பற்றி எந்த தகவலும் இல்லை. எனவே, தமிழக அரசு அதிகாரிகள் எங்கள் மகனை கண்டுபிடித்து கொடுக்க உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மாணவர் ரித்திக்கின் தாய் கதறி அழுதார். அவரை சமாதானப்படுத்திய அதிகாரிகள் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

    இதை தொடர்ந்து அவர் கண்ணீர் மல்க புகார் அளித்தார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அவரை அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, இந்திய தூதரகம் மூலமாக ஜார்ஜியா நாட்டு அதிகாரிகளிடம் மாணவன் விவகாரத்தில் நடந்தது என்ன? என்பது பற்றி கேட்டுள்ளோம். அங்கிருந்து கிடைக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் என்று தெரிவித்தனர்.

    • சுகாதாரமற்ற நிலையில் பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வதை பொறுத்து அமையும் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.

    சென்னை:

    சென்னை கோட்டையில் உள்ள தலைமைச் செயலகம் கடும் இட நெருக்கடியாக உள்ளதை கருத்தில் கொண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டினார். சட்டசபையும் அங்குதான் சிறிது காலம் செயல்பட்டது.

    2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் புதிய தலைமைச் செயலகம் எண்ணை கிணறு வடிவில் இருப்பதாகவும், இங்கு அனைத்து அலுவலகமும் இயங்க கூடிய அளவுக்கு போதிய வசதிகள் இல்லை என்றும் கூறி அங்கே செல்ல மறுத்து விட்டார்.

    அதுமட்டுமின்றி, புதிய தலைமைச் செயலகத்தை அரசினர் பன்னோக்கு உயர் மருத்துவமனையாக மாற்றி விட்டு சட்டசபையை மீண்டும் கோட்டைக்கு கொண்டு வந்து விட்டார்.

    இப்போது தி.மு.க. ஆட்சி நடந்து வரும் நிலையில் தலைமை செயலகத்தை மீண்டும் ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள புதிய தலைமைச் செயலக கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும் என்று தலைமை செயலக சங்கம் வலியுறுத்தி வருகிறது.

    தலைமை செயலகத்தில் இட நெருக்கடி பெரிய பிரச்சினையாக உள்ளதாகவும், சிறிய அறைகளில் நிறைய பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும், அசுத்த காற்று வெளியேற முறையான அமைப்புகள் இல்லாததால் சுகாதாரமற்ற நிலையில் பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    இது அரசின் கொள்கை முடிவு என்பதால் தலைமைச் செயலகம் ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள புதிய தலைமை செயலக கட்டிடத்துக்கு இடம் மாறுமா? இல்லையா? என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வதை பொறுத்து அமையும் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.

    போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 28-ந்தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
    சென்னை

    மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தத்துடன் மத்திய அரசு கொண்டு வர உள்ள சாலை பாதுகாப்பு மசோதாவை கண்டித்து அகில இந்திய போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் நாடு முழுவதும் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 7-ந்தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.

    இதற்கு தமிழகத்தை சேர்ந்த அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த கூட்டமைப்பில் தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்பட கட்சிகளை சேர்ந்த 10 தொழிற்சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன.

    இந்நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்த விளக்க கூட்டம் சென்னை பல்லவன் இல்லம் அருகே நேற்று நடைபெற்றது.

    கூட்டமைப்பின் தலைவரும், தொ.மு.ச. பொதுச்செயலாளருமான சண்முகம் தலைமையில், பொருளாளர் நடராஜன் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் பேசியதாவது:-

    மத்திய அரசின் சாலை பாதுகாப்பு மசோதாவில் பஸ் நடத்துனர் லைசென்சு பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அரசும் நடத்துனர் இல்லாத பஸ்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் சாலை பாதுகாப்பு மசோதாவில் போக்குவரத்து தொழிலை நசுக்கும் பல்வேறு அபாயங்கள் உள்ளது. எனவே நாடு முழுவதும் ஆகஸ்டு 7-ந்தேதி நடைபெற உள்ள வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றி அடைய செய்ய வேண்டும்.

    மேலும் போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 28-ந்தேதி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×