செய்திகள்
அமைச்சர் செல்லூர் ராஜூ

பெரியார் பேருந்து நிலைய பணிகள் 3 மாதத்தில் முடிவடையும்- செல்லூர் ராஜூ பேட்டி

Published On 2020-03-02 11:15 GMT   |   Update On 2020-03-02 11:15 GMT
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்படும் மதுரை பெரியார் பேருந்து நிலைய பணிகள் 3 மாதத்தில் முடிவடையும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை:

மதுரை சோலையழகுபுரத்தில் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை அமைச்சர் செல்லூர் ராஜூ பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

“கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் உரிமை பெற்று இயங்கி வருகிறது, முதல் வரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் வழியே 24 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்படும் மதுரை பெரியார் பேருந்து நிலைய பணிகள் தாமதமாக நடைபெறுவதாக கூறுகிறார்கள். அங்கு மேற்கு பகுதியில் பஸ் நிறுத்தும் அமைக்கும் பணி இன்னும் 3 மாதத்தில் முடிவடையும்.

தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட தயாராக உள்ளேன் என்கிற ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன். நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

புதிய மருத்துவக்கல்லூரியால் தமிழக மாணவர்கள் பயன்பெறுவார்கள். பணக்கார மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வி ஏழை மாணவர்களுக்கும் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News