என் மலர்
நீங்கள் தேடியது "Periyar bus stand"
- பெரியார் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
- இதனால் பஸ் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.
மதுரை
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பில் பெரியார் பஸ் நிலையம் புதிதாக கட்டப்பட்டு அதன் ஒரு பகுதி பயன்பாட்டில் உள்ளன.
புதிய பஸ் நிலையத்தில் உள்ள பிளாட் பாரங்களில் பழக்கடை உள்ளிட்டவற்றை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது.
மேலும் இந்த கடைகள் மூலம் குப்பைகளும் அதிக ரித்தது. இதனால் சுகாதார சீர்கேடும், பயணிகளுக்கு தொந்தரவும் ஏற்பட்டது.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் இன்று பஸ் நிலையத்தில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு செய்த பழக்கடைகளை அகற்ற முற்பட்டனர்.
அப்போது வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் பஸ் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.
பெரியார் பஸ் நிலையத்தில் கைப்பை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
இதனால் அதிர்ச்சியடைந்த கயல்விழி கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் துரத்திச் சென்று 3 பேரையும் பிடித்தனர்.
திடீர்நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை சேர்ந்த கணேசன் மனைவி சுதா (40), சுரேஷ் மனைவி ரேவதி (25), கிருஷ்ணா மனைவி காமாட்சி (35) என தெரியவந்தது.
3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் ரொக்கம், ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர்.






