என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Encroachment Removal"

    • பெரியார் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • இதனால் பஸ் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.

    மதுரை

    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பில் பெரியார் பஸ் நிலையம் புதிதாக கட்டப்பட்டு அதன் ஒரு பகுதி பயன்பாட்டில் உள்ளன.

    புதிய பஸ் நிலையத்தில் உள்ள பிளாட் பாரங்களில் பழக்கடை உள்ளிட்டவற்றை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது.

    மேலும் இந்த கடைகள் மூலம் குப்பைகளும் அதிக ரித்தது. இதனால் சுகாதார சீர்கேடும், பயணிகளுக்கு தொந்தரவும் ஏற்பட்டது.

    இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் இன்று பஸ் நிலையத்தில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு செய்த பழக்கடைகளை அகற்ற முற்பட்டனர்.

    அப்போது வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் பஸ் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.

    • நடை பாதைகள் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள தால் பொதுமக்கள் நடந்து செல்ல வழியில்லாமல் அவதியடைந்தனர்.
    • ஜவுளிக்கடை ஒன்றின் முன்பு வைக்கப் பட்டிருந்த மெகா ஜென ரேட்டரை அப்புறப்படுத்தி னர்.

    கடலூர்:

    சிதம்பரத்தில் காவல் துறை சார்பில் நடைபாதை ஆக்கிர மிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. சிதம்பரம் நகரில் 4 வீதிகள் மற்றும் சன்னதிகளில் நடை பாதைகள் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள தால் பொதுமக்கள் நடந்து செல்ல வழியில்லாமல் அவதி யடைந்தனர். மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.

    இந்நிலையில் சிதம்பரம் கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மேற்பார்வையில், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பார்த்தீபன், சட்டம்-ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் மேலரத வீதியில் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி னர். ஜவுளிக்கடை ஒன்றின் முன்பு வைக்கப் பட்டிருந்த மெகா ஜென ரேட்டரை அப்புறப்படுத்தி னர். அதே போன்று நடராஜர் கோயில் பிரதான வாயிலான கீழசன்னதியில் சாலையில் உள்ள ஆக்கிர மிப்புகளையும் அகற்றினர். மேலும் நடைபாதையை ஆக்கிரமித்தால், அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    • காமராஜர் காலனி பகுதியில் சாக்கடை கால்வாயை சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர்.
    • இதனால் சாக்கடை கழிவு நீர் தேங்கி கிடப்பதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர்.

    சேலம்:

    சேலம் பெரமனூர், காமராஜர் காலனி பகுதியில் சாக்கடை கால்வாயை சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர். இதனால் சாக்கடை கழிவு நீர் தேங்கி கிடப்பதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர்.

    இதைத் தொடர்ந்து இன்று மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது. இதனால் அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவே ற்றப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அப்போது செயற்பொறி யாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர்கள் தமிழ்ச்செல்வன், செந்தில் குமார் மற்றும் 

    ×