செய்திகள்
பிரேமலதா விஜயகாந்த்

அ.தி.மு.க.வில் இருந்து நல்ல முடிவு வரும் - பிரேமலதா

Published On 2020-02-28 06:03 GMT   |   Update On 2020-02-28 06:03 GMT
மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக அ.தி.மு.க.வில் இருந்து நல்ல முடிவை அறிவிப்பார்கள் என எதிர்பார்ப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
திருச்சி:

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திருச்சியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் முக்கால்வாசி இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தே.மு.தி.க.விற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தொடர்ந்து கேட்டு வருகிறோம். இது குறித்து அ.தி.மு.க. தலைமை மூத்த உறுப்பினர்களுடன் ஆலோசித்து வருவதாக கூறியுள்ளது. அவர்கள் நல்ல முடிவை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். தே.மு.தி.க.விற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என கூட்டணி அமைக்கும் போதே பேசியுள்ளோம்.

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி.யால் இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்காகத்தான் இத்தகைய சட்டங்கள் என்பதனை அனைவரும் உணர வேண்டும். இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால் பாதிப்பு என்றால் அவர்களுக்காக களத்தில் இறங்கும் முதல் கட்சியாக தே.மு.தி.க. இருக்கும்.

தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய 2 கட்சிகளும் தமிழகத்தின் கடன் சுமையை மாறி மாறி ஏற்றுவதை நிறுத்தி விட்டு வேலைவாய்ப்பிற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நிர்வாகிகள் டி.வி. கணேஷ், மோகன், சாதிக் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News