செய்திகள்
நாகம்மாள் பிணமாக கிடக்கும் காட்சி.

மத்தூர் அருகே ஆற்றில் பிணமாக கிடந்த பெண்

Published On 2020-02-26 14:57 GMT   |   Update On 2020-02-26 14:57 GMT
மத்தூர் அடுத்துள்ள மாதம்பதி முருகன் கோவில் அருகே உள்ள ஆற்றில் பெண் பிணம் மிதந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்துள்ள மாதம்பதி முருகன் கோவில் அருகே உள்ள ஆற்றில் பெண் பிணம் மிதந்து உள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மத்தூர் போலீசார் ஆற்றில் இருந்து உடலை மீட்க போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையில் அந்தப் பெண்ணின் உடலை போராடி ஆற்றின் வெளியே கொண்டு வந்தனர். இறந்துபோன பெண் 15 நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என தெரியவந்தது. 

இதையடுத்து முத்தூர் போலீசார் அந்தப் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தினர். 

விசாரணையில் இறந்த பெண் போச்சம்பள்ளி அடுத்துள்ள பாலேதோட்டம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி நாகம்மாள் (வயது 65) என தெரியவந்தது. இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், இவருக்கு 2 மகள்கள் இருப்பதாகவும் தெரியவந்தது. இது குறித்து மத்தூர் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட நாகம்மாள் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News