செய்திகள்
எச்.ராஜா

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியினர் பேரணி- எச்.ராஜா

Published On 2020-02-24 07:03 GMT   |   Update On 2020-02-24 07:03 GMT
தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வருகிற 28-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பேரணி நடைபெறும் என எச்.ராஜா கூறியுள்ளார்.
விழுப்புரம்:

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று காலை விழுப்புரத்துக்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற 28-ந்தேதி தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக மாவட்ட தலைநகரங்களில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பேரணி மற்றும் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் மனு கொடுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் பேரணியில் எனது தலைமையில் பாரதிய ஜனதாகட்சியினர் கலந்து கொள்கிறார்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் பேரணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கலந்து கொள்கிறார்கள். இந்த பேரணியானது அமைதியான முறையில் நடைபெறும். போலீசாரின் மீது கல்வீச்சு போன்ற அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இந்த பேரணியில் நடக்காது. தேசபக்தியை உணர்த்தும் வகையில் இந்த பேரணி நடைபெறும்.

இந்திய நாட்டுக்கு விரோதமாகவும், அனுமதியின்றியும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முஸ்லிம்கள் மசூதியில் இருந்து கொண்டு போலீசாரின் மீது கல்வீசி தாக்குகிறார்கள். காவல் துறை கைகட்டி நிற்கிறது. ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக ஒரு தனிநபர் போராடினால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்கிறார்கள்.

தமிழகத்தில் இந்து மதத்தினர் 2-ம் தர குடிமக்களாக மதிக்கப்படுகின்றனர். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.



பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் வி.ஏ.டி.கலிவரதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News