செய்திகள்
திருமாவளவன்

திருச்சியில் வருகிற 22-ந் தேதி தேசம் காப்போம் பேரணி- திருமாவளவன் பேட்டி

Published On 2020-02-16 11:46 GMT   |   Update On 2020-02-16 11:46 GMT
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தை கண்டித்து திருச்சியில் வருகிற 22-ந் தேதி தேசம் காப்போம் பேரணி நடைபெற உள்ளது என்று திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளார்.

கோவை:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மண்ட சிறப்பு செயற்குழு கூட்டம் கோவை டாடாபாத்தில் நடைபெற்றது. இதில் மேற்கு மண்டலமான கோவை, நீலகிரி,ஈரோடு, திருப்பூர், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை கண்டித்து திருச்சியில் வருகிற 22-ந் தேதி பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்றுதிரட்டி ‘’ தேசம் காப்போம் ‘’ என்ற பேரணி நடைபெற உள்ளது.

சென்னை வண்ணாரப் பேட்டையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய முஸ்லிம்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பலர் காயம் அடைந்துள்ளனர்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் அரசின் அடுக்கு முறை காரணமாக துப்பாக்கி சூடு நடந்ததால் சிலர் கொல்லபட்டனர்.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக இஸ்லாமியர்கள் தினமும் போராடி வருகிறார்கள். ஆனால் அவர்கள் எந்த ஒரு இடத்திலும் வரம்பு மீறி நடக்கவில்லை.

இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு என்ற முழக்கத்துடன் தேசிய கொடியினை வைத்து போராடுகிற இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.

மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News