செய்திகள்
கைது

இரணியல் அருகே ஓடும் பஸ்சில் பணம் திருட்டு- தொழிலாளி கைது

Published On 2020-02-05 08:47 GMT   |   Update On 2020-02-05 08:47 GMT
இரணியல் அருகே ஓடும் பஸ்சில் பணம் திருடப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தொழிலாளியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் நேற்று தக்கலையில் இருந்து நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

அரசு பஸ்சில் பயணம் செய்த ஐயப்பன் அமர்ந்திருந்து இருக்கைக்கு அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் அமர்ந்திருந்தார்.

பஸ் நாகர்கோவில் வந்ததும், ஐயப்பன் பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். அப்போது அவர் கைப்பையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஐயப்பன் இதுபற்றி உறவினர் ஒருவருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அவர்கள் நாகர்கோவிலில் இருந்து ஐயப்பன் பயணம் செய்த பஸ்சை ஒரு ஆட்டோவில் பின்தொடர்ந்து சென்றனர்.

பஸ் பார்வதிபுரம் சென்றபோது ஐயப்பன் அருகில் இருந்த நபர் அங்கு இறங்கினார். உடனே அந்த நபரிடம் பணம் குறித்து கேட்டபோது அவர் தனக்கு எதுவும் தெரியாது என்றார்.

உடனே ஐயப்பன் இது பற்றி போலீசில் புகார் செய்ய போகிறேன் என்றதும் அந்த நபர், பணத்தை எடுத்து கொடுத்தார்.

இதையடுத்து ஐயப்பனும், அவரது உறவினரும் சேர்ந்து அந்த நபரை பிடித்தனர். பின்னர் அவர்கள் அவரை இரணியல் போலீசில் ஒப்படைத்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் ஆகியோர் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் தெங்கம்புதூரை சேர்ந்த செல்வகுமார், தொழிலாளி என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News