செய்திகள்
கமல்ஹாசன்

டெல்லி தேர்தல்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு

Published On 2020-01-30 04:28 GMT   |   Update On 2020-01-30 04:28 GMT
புதுடெல்லி தேர்தலில் தற்போதைய முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவாலின் பேச்சு ஒன்றை பகிர்ந்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
சென்னை :

டெல்லி மாநில சட்டசபை தேர்தல் வரும் 8-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

புதுடெல்லி தேர்தலில் தற்போதைய முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவாலின் பேச்சு ஒன்றை பகிர்ந்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். கமல் அந்த பதிவில் கூறியிருப்பதாவது:

சாதனையாளார் அரவிந்த் கெஜ்ரிவாலின் பிரமிக்கத்தக்க உரை. கெஜ்ரிவாலை தலைவராக பின் தொடராதீர்கள். அவரை அப்படியே உள்வாங்கி கொள்ளுங்கள்.
இது அறிவுரை அல்ல. நமக்கு விடப்பட்டிருக்கும் சவால். நான் இந்த சவாலை ஏற்றுக்கொண்டுவிட்டேன். எனது தோளோடு தோள் நிற்கும் எனது சகோதரர் கெஜ்ரிவாலுக்கு சல்யூட் செய்கிறேன். டெல்லி தொலைவில் இல்லை.

இவ்வாறு  கமல் பதிவிட்டுள்ளார்.



இதற்கு பதில் அளிக்கும் வகையில் கமல்ஹாசனின் டுவிட்டர் பதிவை சுட்டிக் காட்டி கெஜ்ரிவால் கூறியிருப்பது:-

நன்றி கமல் அவர்களே. டெல்லி முதல்வராக இருந்த ஐந்தாண்டு அனுபவத்தில் உணர்ந்தது. நமது நாட்டு மக்களை வேண்டும் என்றே கல்வி அறிவில்லாதவர்களாகவும், வறுமையானவர்களாகவும் கடந்த 70 ஆண்டுகளாக வைத்துள்ளனர். அரசிடம் பணம் இல்லை என்பது பொய்யானது. ஆட்சியாளர்களுக்கு நல்ல நோக்கம் வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News