செய்திகள்
சிறை

விமானத்தில் தங்க கட்டிகள் கடத்தல்: கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் சிறையில் அடைப்பு

Published On 2019-12-23 09:57 GMT   |   Update On 2019-12-23 09:57 GMT
கோவை விமானத்தில் தங்க கட்டிகள் கடத்தி வந்த கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை:

வளைகுடா நாடான சார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு நேற்று காலை ஏர் அரேபியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது 2 வாலிபர்கள் கொண்டு வந்த ஏர்கூலர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அதிகாரிகள் ஏர்கூலரை சோதனை செய்தனர். அப்போது வாலிபர்கள் அதற்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து மேல்புறத்தில் மெர்குரி முலாம் பூசி கடத்தி வந்தது தெரியவந்தது.

அதில் இருந்த 7 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 2žகோடி ஆகும். இதையடுத்து அதிகாரிகள் தங்க கட்டிகளை கடத்தி வந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த முகமது ஷாருக்கான் (வயது 19). கல்லூரி மாணவர். அதே பகுதியை சேர்ந்த ஹமீமு அக்தர் (21) என்பது தெரிய வந்தது. 2 பேரும் தங்களது பெற்றோரிடம் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதாக கூறிவிட்டு சென்று வந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து அதிகாரிகள் 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News