செய்திகள்
குண்டர் சட்டம்.

கண்ணமங்கலம் அருகே ஆசிரியையை கொன்ற 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2019-12-17 16:39 GMT   |   Update On 2019-12-17 16:39 GMT
கண்ணமங்கலம் அருகே நகைக்காக ஆசிரியையை கொன்ற 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த முனியந்தாங்கல் கிராமத்தில் கடந்த மாதம் 5ம்தேதி இரவு ஓய்வு பெற்ற ஆசிரியை லூர்து மேரி கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 

இது சம்பந்தமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி உத்தரவின் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் டிஎஸ்பிக்கள் செந்தில், குணசேகரன், இன்ஸ்பெக்டர்கள் சாலமன் ராஜா, ஜெயபிரகாஷ், விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிரமாக புலனாய்வு செய்து, ஆசிரியை லூர்து மேரிக்கு சொந்தமான கடையில் சிக்கன் கடை வைத்திருந்த கருங்காலி குப்பம் சந்தைமேடு இலியாஸ் (30), இவரது அண்ணன் வாலாஜா கல்மேல்குப்பம் கிராமத்தை சேர்ந்த மூசா (40), யூசுப் (36), ராணிப்பேட்டை விஜயகுமார் (35) ஆகிய 4 பேரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். 

தொடர்ந்து நகை பணத்துக்காக திட்டமிட்டு கொலை செய்த வழக்கில் நான்கு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்க, மாவட்ட எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி, ஆரணி டிஎஸ்பி செந்தில், கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா ஆகியோர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். 

கலெக்டர் கந்தசாமி, 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் உத்தரவு நகல் வேலூர் ஜெயில் அதிகாரிகளிடம் வழங்கினர். ஏற்கனவே வேலூர் ஜெயிலில் உள்ள நான்கு பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஏற்பாடு செய்தனர்.
Tags:    

Similar News