search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலூர் ஜெயில்"

    • கடந்த காலங்களில் ஏராளமான செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • ஜெயிலில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் ஜெயில் மற்றும் பெண்கள் தனிச்சிறை உள்ளது. இங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ஜெயிலுக்குள் கைதிகள் கஞ்சா, செல்போன், புகையிலை பொருட்கள், ஆயுதங்கள் போன்றவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் கைதிகள் பலர் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி வந்துள்ளனர்.

    கடந்த காலங்களில் ஏராளமான செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் வெளியே இருந்து ஜெயிலுக்குள் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் வீசப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில் வேலூர் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 56 போலீசாரும், சிறை வார்டன் உள்ளிட்ட 65 சிறை காவலர்கள் சேர்ந்து வேலூர் ஜெயிலில் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினர்.

    ஆண்கள் ஜெயிலில் காலை 6 மணி முதல் சோதனை நடத்தினர். அப்போது 2 மோப்ப நாய்கள் உதவியுடன் கைதிகளின் அறை, கழிவறை பகுதிகள், சமையலறை என வளாகம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர். 2 மணி நேரம் இந்த சோதனை நடந்தது.

    இதேபோல போலீசார் பெண்கள் ஜெயிலில் சோதனை நடத்தினர்.

    2 ஜெயில்களிலும் நடந்த இந்த அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். ஜெயிலில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

    • போக்சோ வழக்கில் கைதாகி தண்டனை பெற்ற ஆசை தம்பி கடந்த ஆண்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    • வேலூர் ஜெயிலில் நெஞ்சுவலி காரணமாக கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.

    வேலூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்தவர் ஆசை தம்பி (வயது 35). போக்சோ வழக்கில் கைதாகி தண்டனை பெற்ற இவர் கடந்த ஆண்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    நேற்று ஜெயிலில் இருந்த ஆசை தம்பிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. தரையில் சரிந்து விழுந்த அவரை மீட்டு ஜெயில் ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆசைத்தம்பி பரிதாபமாக இறந்தார்.

    பாகாயம் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் ஜெயிலில் நெஞ்சுவலி காரணமாக கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.

    இதனை தடுக்க ஜெயிலில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் நெஞ்சு வலிக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    குடியாத்தம் அருகே உள்ள கார்த்திகேயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது பாஷா (வயது 33) திருட்டு வழக்கில் கடந்த மாதம் குடியாத்தம் டவுன் போலீசார் கைது செய்தனர்.

    இவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம் 13-ந் தேதி முகமது பாஷாவுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. ஜெயில் ஆஸ்பத்திரியில் அவருக்கு முதலுதவி அளித்தனர்.

    பின்னர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த முகமது பாஷா இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி முருகன் கடந்த மாதம் 8-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்தார்.
    • ஜெயில் உணவை தவிர்த்து அவர் தண்ணீர் மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிட்டார்.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் அடைக்கப் பட்டுள்ள முருகன், பரோல் வழங்க வலியுறுத்தி பலமுறை சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தார்.

    அவர் மீது சிறை விதிமீறல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி முருகன் கடந்த மாதம் 8-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்தார். சிறை அதிகாரிகள் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.ஆனால் முருகன் உண்ணாவிரதத்தை கைவிட வில்லை. ஜெயில் உணவை தவிர்த்து அவர் தண்ணீர் மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிட்டார்.

    முருகனின் உடல்நிலை மோசமானதால் அவருக்கு ஜெயில் வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது‌ தொடர்ந்து டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் சிறை காவலர் ஒருவரை அவதூராக பேசிய வழக்கு சம்பந்தமாக முருகன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.

    அவரிடம் உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி சிறை அதிகாரிகள் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து 52 நாட்களுக்கு பிறகு முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டார். இன்று காலை அவர் ஜெயில் உணவை சாப்பிட்டார்.

    • சுமதி கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார்.
    • சுமதிக்கு மனநலம் பாதிப்பு ஏற்பட்டது.

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் தூசியை சேர்ந்தவர் சுமதி (வயது 40). கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். விசாரணை கைதியான இவர் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு மனநலம் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சுமதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலூர் சிறை காவலர் ஒருவரை அவதூறாக பேசியதாக பாகாயம் போலீஸ் நிலையத்தில் முருகன் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.
    • வழக்கை விரைந்து முடிக்க கோரி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

    வேலூர் சிறை காவலர் ஒருவரை அவதூறாக பேசியதாக பாகாயம் போலீஸ் நிலையத்தில் முருகன் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க கோரி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    இன்று காலைமுருகன் ஜெயிலில் உணவு சாப்பிடவில்லை. 7-வது நாளாக அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    வேலூர் ஜெயிலில் வக்கீல் புகழேந்தி முருகனை சந்தித்து பேசினார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    வேலூர் சிறையில் இருக்கும் முருகனை சந்தித்தேன். அவர் யாரிடமும் பேசாமல் உணவு உண்ணாமல் "ஜீவ சமாதி" அறநிலை போராட்டத்தை மேற்கொள்வதாக தெரிவித்தார். அதிகாரிகளுக்கு தன்னை விடுதலை செய்ய விருப்பம் இல்லை. தனக்கு போராட உடலிலும் மனதிலும் சக்தி இல்லை என்று எழுத்து மூலம் தெரிவித்ததாக கூறினார்.

    சிறைத்துறை அதிகா ரிகள் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    • அவருக்கு ஆஸ்துமா மற்றும் இருதய பாதிப்பு இருந்தது.

    வேலூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கீழமங்கலத்தைச் சேர்ந்தவர் தசராஜ் (வயது 96). அந்த பகுதியில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஆஸ்துமா மற்றும் இருதய பாதிப்பு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு தசராஜ் திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தசராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சிறை அதிகாரிகள் பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×