வேலூர் ஜெயில் கைதி திடீர் சாவு

அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் நெஞ்சு வலிக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபம் போலீசார் விசாரணை
வேலூர் ஜெயில் கைதி திடீர் சாவு
Published on

வேலூர்:

குடியாத்தம் அருகே உள்ள கார்த்திகேயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது பாஷா (வயது 33) திருட்டு வழக்கில் கடந்த மாதம் குடியாத்தம் டவுன் போலீசார் கைது செய்தனர்.

இவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம் 13-ந் தேதி முகமது பாஷாவுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. ஜெயில் ஆஸ்பத்திரியில் அவருக்கு முதலுதவி அளித்தனர்.

பின்னர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த முகமது பாஷா இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com