செய்திகள்
மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி

தமிழக தேர்தல் ஆணையருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது திமுக

Published On 2019-12-16 10:55 GMT   |   Update On 2019-12-16 13:54 GMT
உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையருக்கு எதிராக திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

தமிழகத்தில் பல்வேறு சட்ட சிக்கல்களைக் கடந்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கின. 

அதன்பின்னர் இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படாததால் தேர்தல் ஆணைய அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தலை நடத்தவேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அதன்பின்னர் தேர்தல் பணி விறுவிறுப்படைந்தது.



வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், திமுக சார்பில்  உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை முழுமையாக செயல்படுத்தவில்லை. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இடஒதுக்கீடு மற்றும் வார்டு மறுவரையறை செய்யப்படவில்லை. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News