செய்திகள்
வாலிபர்கள் சிறையில் அடைப்பு

திருவையாறு அருகே தொழிலாளி கொலை வழக்கில் 4 வாலிபர்கள் கைது

Published On 2019-11-20 10:35 GMT   |   Update On 2019-11-20 10:35 GMT
திருவையாறு அருகே தொழிலாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 வாலிபர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருவையாறு:

திருவையாறு அடுத்த அம்மன்பேட்டை தெற்குத்தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் டென்னீஸ்ராஜ் (வயது38). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு சூர்யா என்ற மனைவியும், கார்ட்வின்(9) என்ற மகனும், கரன்சியா(7) என்ற மகளும் உள்ளனர். கடந்த 17-ம் தேதி இரவு அதே ஊரைச்சேர்ந்த வக்கீல் சுதாகர்(40) ஆகிய இருவரும் வி.ஏ.ஓ. அலுவலகம் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் சரமாரியாக டென்னீஸ்ராஜை அரிவா ளால் வெட்டினர். அதை தடுத்த சுதாகருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் டென்னீஸ்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். சுதாகர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சுதாகர் கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்கு பதிவு செய்து இந்த வழக்கின் குற்றவாளியான அம்மன் பேட்டை தெற்குத்தெருவை சேர்ந்த கேம்பளஸ் மகன் ஜெந்திரஜினி என்ற பாவா (19), செல்வராஜ் மகன் காட்டுராஜா(26), அமலதாஸ் மகன் சிவசக்தி(19), குருநாதன் மகன் மணிசங்கர்(19) ஆகிய 4 பேரையும் கைது செய்து தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

கைதான 4 பேரையும் டிசம்பர் 3-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் 4 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை நடுக்காவேரி போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News