செய்திகள்
தொழிலாளி பலி

சாலையோரம் தூங்கியபோது ஆம்னிபஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி

Published On 2019-11-15 06:27 GMT   |   Update On 2019-11-15 06:27 GMT
சாலையோரம் தூங்கியபோது ஆம்னிபஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

கோயம்பேடு காளியம்மன் கோவில் தெருவில் இரவு நேரங்களில் ஏராளமான தனியார் ஆம்னி பஸ்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று இரவு கழிவுநீர் வாரிய அலுவலகம் எதிரே நிறுத்தியிருந்த ஆம்னி பஸ்சை டிரைவர் எடுத்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக பிளாட்பாரத்தை ஒட்டி சாலையின் ஓரம் படுத்து கிடந்த 40 வயது மதிக்கதக்க வாலிபர் மீது பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் அவர் அதே இடத்தில் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. தகவலறிந்ததும் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்யும் தொழிலாளி ஆக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பஸ் டிரைவர் சிவக் குமார் (37) கைது செய்யப்பட்டார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்.

Tags:    

Similar News