செய்திகள்
தற்கொலை (கோப்புப்படம்)

கோவையில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் பெண் தற்கொலை

Published On 2019-11-12 11:36 GMT   |   Update On 2019-11-12 11:36 GMT
கோவையில் கணவர் மருத்துவ செலவுக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கோவை:

கோவை சலீவன் வீதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி திலகவதி (வயது 55). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு திலகவதியின் கணவர் மகேந்திரனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.

இதற்கு சிகிச்சை அளிப்பதற்காக திலகவதி சிலரிடம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் மகேந்திரன் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பரிதாபமாக இறந்தார்.

இதனையடுத்து கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி தருமாறு திலகவதியிடம் கேட்டு வந்தனர். ஆனால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவர் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த திலகவதி தான் வேலை பார்க்கும் ஓட்டல் சமையல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பெரிய கடை வீதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட திலகவதியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News