இந்தியா

பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் மவுனம் அபத்தமானது: அம்பானி, அதானி குற்றச்சாட்டில் ப. சிதம்பரம் சாடல்

Published On 2024-05-10 09:07 GMT   |   Update On 2024-05-10 09:07 GMT
  • பிரதமரின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோருவது முற்றிலும் சரியானது.
  • பிரதமரிடம் இருந்து வரும் இந்தக் குற்றச்சாட்டை மிகவும் தீவிரமாகப் பார்க்க வேண்டும்.

மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப. சிதம்பரம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

பிரதமரின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோருவது முற்றிலும் சரியானது. பிரதமர் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இரண்டு முக்கிய தொழிலதிபர்களிடம் (அம்பானி மற்றும் அதானி) டெம்போ நிரப்பும் அளவு பணம் இருப்பதாகவும், அவை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டதாகவும் பிரதமரிடம் இருந்து வரும் இந்தக் குற்றச்சாட்டை மிகவும் தீவிரமாகப் பார்க்க வேண்டும்.

சிபிஐ அல்லது அமலாக்கத்துறை மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார் விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலும் நியாயமானது

கடந்த 24 மணி நேரத்தில் பிரதமர் (சிபிஐ அமைச்சர்) அமைதி காத்தது ஏன்?

விசாரணைக்கான கோரிக்கைக்கு நிதி அமைச்சர் (ED அமைச்சர்) ஏன் பதிலளிக்கவில்லை? அவர்களின் மௌனம் அபத்தமானது.

இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News