search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை தற்கொலை"

    • கள்ளக்காதலி அவரது கணவருடன் சென்றதால் முரளி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
    • சம்பவத்தன்று வீட்டில் இருந்த முரளி வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் முரளி (வயது 38). கூலித்தொழிலாளி. இவருக்கும் சூரியகலா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார்.

    திருமணமான 6 வருடங்களுக்கு பின்னர் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து 2 பேரும் பிரிந்தனர்.

    அதன் பின்னர் முரளிக்கு நிஷா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் 8 ஆண்டுகளாக வசித்து வந்தனர். அதன் பின்னர் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நிஷா முரளியை பிரிந்து சென்றார்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முரளிக்கு திருமணமான இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் இளம்பெண்ணின் வீட்டிற்கு செல்லும் முரளி அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இது குறித்து இளம்பெண் தனது கள்ளக்காதலன் முரளியிடம் கூறினார். எனவே 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறுவது என முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி கோவைக்கு வந்தனர். பின்னர் கணவன்-மனைவி என கூறி துடியலூர் அருகே உள்ள நல்லாம்பாளையத்தில் வீட்டு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர்.

    இந்தநிலையில் இளம்பெண்ணின் கணவர் தனது மனைவியை காணவில்லை என மதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வந்தனர். இளம்பெண் கோவையில் இருப்பதை கண்டுபிடித்த போலீசார் அவரை மீட்டு அவரது கணவரிடம் ஒப்படைத்தனர்.

    தனது கள்ளக்காதலி அவரது கணவருடன் சென்றதால் முரளி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிபி சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டு 3 நாட்கள் இருக்கும் என்பதால் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
    • உடனடியாக போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை:

    கோவை ஆவாரம்பாளையம் அருகே உள்ள ஸ்ரீவள்ளி நகரை சேர்ந்தவர் சிபி சுப்பிரமணியம் (வயது 43). திருமணமாகவில்லை.

    இவர் தனது தாய் வசந்தா (65) என்பவருடன் வசித்து வந்தார். அவரது தாய் மனநலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருந்தார். அவரை சிபி சுப்பிரமணியம் கவனித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. மேலும் கதவு 4 நாட்களுக்கு மேலாக திறக்கப்படாமல் இருந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டிய போது யாரும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர்.

    அப்போது சிபி சுப்பிரமணியம் தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று அவரது உடலை ஆய்வு செய்தனர். அப்போது சிபி சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டு 3 நாட்கள் இருக்கும் என்பதால் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. உடனடியாக போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வீட்டிற்குள் மகன் தற்கொலை செய்து கொண்டது கூட தெரியமால் அவரது தாய் வசந்தா கடந்த 3 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை போலீசார் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிபி சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×