செய்திகள்
கோயம்பேடு பஸ் நிலையம்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 12½ பவுன் நகை-பணம் திருட்டு

Published On 2019-10-28 09:48 GMT   |   Update On 2019-10-28 09:48 GMT
கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் 12½ பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

போரூர்:

புழல் அடுத்த கதிர்வேடு ஐஎன்டியூசி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சசிகலா. இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலை செல்வதற்காக 2 குழந்தைகளுடன் கால் டாக்ஸி மூலம் கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார்.

சிறிது நேரம் கோயம்பேடு பஸ்நிலையத்தில் உட்கார்ந்து இருந்தார். திருவண்ணா மலை செல்லும் பஸ்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருவது தெரிந்ததும் சசிகலா தாம்பரம் செல்வதற்காக மாநகர பஸ்ஸில் ஏறி அமர்ந்தார்.

பின்னர் டிக்கெட் எடுப்பதற்காக கைப்பையை எடுத்தார். அப்போது 12½பவுன் நகை மற்றும் 3 ஆயிரம் பணத்துடன் இருந்த பர்ஸ் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ் நிலையத்தில் திருடர்கள் பர்ஸை திருடிச் சென்றது தெரிந்தது. 

இதுகுறித்து சசிகலா கோயம்பேடு பஸ் நிலைய போலிசில் புகார் அளித்தார். போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News