search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை பணம் திருட்டு"

    • பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் பணம் திருடு போயிருப்பது தெரிய வந்தது.
    • கோவை நகை கடை கொள்ளையன் கைவரிசையா? போலீசார் விசாரணை

    கோவையில் உள்ள பிரபல நகை கடையில் சிறிய துவாரத்தின் வழியாக கடந்த 28- ந்தேதி நுழைந்த வாலிபர் 4½ கிலோ தங்க மற்றும் வைர நகைகளை திருடிச் சென்றார்.

    இதுகுறித்து கோவை தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள தேவரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (வயது 28) என்பது தெரிய வந்தது. ஆனைமலையில் வீட்டில் பதுங்கி இருந்த விஜய்யை பிடிக்க தனிப்படை போலீசார் சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தேவ ரெட்டியூரில் உள்ள விஜயின் தந்தை முனிரத்தினம், அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது தங்க மோதிரம், தங்க பிரேஸ்லெட் உள்ளிட்ட தங்க நகைகளும்,2 செல் போன்களும் வீட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த முனிரத்தினம் அவற்றை கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு வந்து முனிரத்தினத்திடம் விசாரித்து அந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் டி.புளி யம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி துரைராஜ்(45) என்பவர் விட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று இருந்தார். நேற்று அவர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் பணம் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த மொரப்பூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    கோவை நகை கடையில் திருடிய விஜய், துரைராஜ் வீட்டில் திருட்டில் ஈடுபட்டானா? என்ற கோணத்தில் போலீசாரின் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை நகை கடையில் திருடிய விஜய் அந்த மலைப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.இதன் காரணமாக கோவை தனிப்படை போலீசார் அந்த பகுதியில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • டி.புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி துரைராஜ் என்பவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று இருந்தார்.
    • உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் பணம் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

    மொரப்பூர்:

    கோவையில் உள்ள பிரபல நகை கடையில் சிறிய துவாரத்தின் வழியாக கடந்த 28-ந்தேதி நுழைந்த வாலிபர் 4½ கிலோ தங்க மற்றும் வைர நகைகளை திருடிச் சென்றார்.

    இதுகுறித்து கோவை தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள தேவரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (வயது 28) என்பது தெரிய வந்தது. ஆனைமலையில் வீட்டில் பதுங்கி இருந்த விஜய்யை பிடிக்க தனிப்படை போலீசார் சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தேவரெட்டியூரில் உள்ள விஜயின் தந்தை முனிரத்தினம், அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது தங்க மோதிரம், தங்க பிரேஸ்லெட் உள்ளிட்ட தங்க நகைகளும், 2 செல்போன்களும் வீட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த முனிரத்தினம் அவற்றை கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு வந்து முனிரத்தினத்திடம் விசாரித்து அந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் டி.புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி துரைராஜ்(45) என்பவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று இருந்தார். நேற்று அவர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் பணம் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த மொரப்பூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    கோவை நகை கடையில் திருடிய விஜய், துரைராஜ் வீட்டில் திருட்டில் ஈடுபட்டானா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை நகை கடையில் திருடிய விஜய் அந்த மலைப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக கோவை தனிப்படை போலீசார் அந்த பகுதியில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • 27 ஆயிரம் அபேஸ்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்த ராஜாமணி (வயது 70) முன்னாள் சர்க்கரை ஆலை அலுவலர்.

    சில நாட்களுக்கு முன்பு வழுக்கி விழுந்தது முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ஓசூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    ராஜாமணி நேற்று வீடு திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவை உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 சவரன் தங்க நகை மற்றும் 27 ஆயிரம் மற்றும் அரை கிலோ வெள்ளி ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

    இது குறித்து ராஜாமணி கொடுத்த தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டபகலில் துணிகரம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள மங்கலம் கிராமம், ரோட்டு தெருவில் வசித்து வருபவர் துரை சாமி மனைவி சம்பத்து அம்மாள். இவர் நேற்று மதியம் பக்கத்து தெருவில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 12 பவுன் நகை திருடப்பட்டு இருந்தது.

    உடனே இந்த சம்பவம் குறித்து பாணாவரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். சப்- இன்ஸ்பெக்டர்ராஜா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    பட்டபகலில் நடந்த கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாவை அடுத்த கட்டுப்புடி சாரதி பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மனோ கரன் (வயது 65). தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகின்றார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவியும், மோகன் ராஜ் (32) என்ற மகனும் உள்ளனர். ஆதிலட்சுமி ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் ஷூ தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். மோகன் ராஜ் கரடிகுடிபகுதியில் செல் போன் கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி காலை 8 மணிக்கு 3 பேரும் வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு சென்று உள்ளனர்.

    அப்போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 3½ பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்து மனோகரன் பள்ளிகொண்டா போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி அகரம்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடு பட்டிருந்தார். அப்போது சந் தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளில் நின்றிருந்த 2 பேரை பிடித்து வந்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் விசாரணை மேற்கொண்டார்.

    விசாரணையில் அவர்கள் வேலூர் சலவன் பேட்டை பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (46), சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (51) என்பதும், மனோகரன் வீட்டில் திருடிய தும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    • பக்தர்கள் பஸ்சில் கூட்டமாக ஏறுவதை பயன்படுத்தி 3 பெண்கள், பெண் பயணி ஒருவரின் பையில் இருந்து ரூ.5 ஆயிரத்தை திருடியதை கண்டுபிடித்தனர்.
    • திருட்டில் ஈடுபட்ட 3 பெண்களையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்களிடம் இருந்து நகை, பணம், செல்போன் அடிக்கடி திருட்டு போனது. இதுகுறித்து பக்தர்கள் அங்குள்ள போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் திருமலை பஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சாய்நாத் சவுத்ரி மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது பக்தர்கள் பஸ்சில் கூட்டமாக ஏறுவதை பயன்படுத்தி 3 பெண்கள், பெண் பயணி ஒருவரின் பையில் இருந்து ரூ.5 ஆயிரத்தை திருடியதை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட 3 பெண்களையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பெங்களூருவை சேர்ந்த வசந்தா, கவுரம்மா, மஞ்சுளா என தெரியவந்தது.

    இவர்கள் பாலாஜி பஸ் நிலையம், அன்னதான கூடம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர்களிடம் இருந்து நகை, பணம், செல்போன் உள்ளிட்டவைகளை கொள்ளை அடித்ததாக ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து அவர்களிடம் இருந்து 93 கிராம் தங்கம், 32 கிராம் வெள்ளி, செல்போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தாரமங்கலம் அருகே வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற நபர்கள் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 55). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி அதே ஊரில் வெவ்வேறு இடத்தில் வசித்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று மகேஸ்வரி தனது மகள் சுமதி வீட்டிற்கு சென்றார். இரவு பலத்த மழை பெய்ததால் அவரால் வீட்டிற்கு வர முடியவில்லை. இதனால் மகள் வீட்டிலேயே தங்கி விட்டார். மறுநாள் காலை அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பாத்ரூம் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் நகை மற்றும் 5ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. 

    இதுபற்றி மகேஸ்வரியிடம் அக்கம் பக்கத்தினர் கூறும்போது, மகேஸ்வரியின் மற்றொரு மகளான வேணி, அவரது மகன் நவப்பிரகாசம் மற்றும் அவரது நண்பர் வெங்கடாசலம் ஆகியோர் வீட்டருகே நடமாடியதாக தெரிவித்தனர்.
    இதையடுத்து மகேஸ்வரி தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதில் அவர், தனது மகள் வேணி மற்றும் பேரன் நவப்பிரகாசம் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ராஜு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
    ×