செய்திகள்
சென்னை ஐகோர்ட்

ஆன்லைனில் பட்டாசு விற்கும் இணையதளங்களை முடக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு

Published On 2019-10-25 09:57 GMT   |   Update On 2019-10-25 09:57 GMT
ஆன்லைனில் பட்டாசு விற்கும் இணைய தளங்களை முடக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

ஆன்லைனில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி ஷேக் அப்துல்லா என்பவர் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஆன்லைனில் பட்டாசு விற்க தடை விதித்து உத்தரவிட்டது.

ஆனால், ஐகோர்ட் விதித்த உத்தரவை முறையாக நிறைவேற்றவில்லை என ஷேக் அப்துல்லா என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், உத்தரவை நீறைவேற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த ஐகோர்ட், ஆன்லைன் மூலம் பட்டாசு விற்கும் இணைய தளங்களை முடக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்தால் தண்டனை விதிக்கப்படும் என விளம்பரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
Tags:    

Similar News