செய்திகள்
விவசாயிகள் பாலை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

ஆரணி அருகே பாலை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்

Published On 2019-10-15 11:14 GMT   |   Update On 2019-10-15 11:14 GMT
ஆரணி அருகே பாலை தரையில் கொட்டி விவசாயிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆதனுர் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுக்கு மேலாக ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் இயங்கி வருகிறது. இதில் சுமார் 400பேர் உறுப்பினராக உள்ளனர். இந்த பால் கூட்டுறவு சங்கத்தின் கீழ் ஆதனூர், கீழையூர், விருபாட்சிபுரம் உள்ள கிராமங்களில் உள்ள பால் விவசாயிகள் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் பால் வழங்கி வருகின்றனர். தினமும் 2700 முதல் 3200 லிட்டர் அளவிலான பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பால் கொள்முதலை ஆதனூர் பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் பாதியளவிற்கு குறைத்தனர்.

இதனால் பால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர் மற்றும் தலைவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முறையிட்டனர்.

இருப்பினும் பால் வாங்க ஆதனூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் மறுத்து விட்டது, முதலில் பால் கொண்டு வருபவர்களிடம் மட்டுமே கொள்முதல் செய்ப்படுகிறது. இதனால் அதிகாலை முதலே பால் விவசாயிகள் ஆதனூர் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் ஓருவரை ஓருவர் முண்டியடித்து சென்று பால் வழங்கி வருகின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பால் விவசாயிகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் இன்று காலை ஆதனூர் பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகம் எதிரில் திடீரென பாலை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக ஏற்பட்டது.

இது சம்மந்தமாக ஆவின் அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

மேலும் அதிகாரிகள் பால் கொள்முதல் செய்ய போதியளவில் கேன்கள் இல்லை, மற்றும் உயரதிகாரிகள் பால் அதிகளவில் கொள்முதல் செய்ய வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். என்று ஆவின் அதிகாரிகள் கூறியதாக பால் விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கபட்டுள்ளது. பால் கொள்முதலை நம்பிதான் நங்கள் உள்ளோம். முழுமையாக பால் கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவாசாயிகள் வலியுறுத்தினர். 

Tags:    

Similar News