செய்திகள்
தமிழக அரசு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

Published On 2019-10-03 13:06 GMT   |   Update On 2019-10-03 13:06 GMT
டாஸ்மாக் ஊழியர்களுக்கு இந்தாண்டு தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்கப்படுவதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
சென்னை:

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் என பலர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தீபாவளியையொட்டி போனஸ் வழங்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தாண்டு டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.16,300, மற்ற ஊழியர்களுக்கு ரூ.16,800 போனஸ் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News