செய்திகள்
கறிக்கோழி

நாமக்கல் மாவட்டத்தில் கறிக்கோழி விலை உயர்வு

Published On 2019-09-25 04:15 GMT   |   Update On 2019-09-25 04:15 GMT
புரட்டாசியை முன்னிட்டு, 10 சதவீதம் உற்பத்தி குறைந்துள்ளதால், கறிக்கோழி கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது.
நாமக்கல்:

தமிழகத்தில் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி) சார்பில் தினமும் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த 1-ந் தேதி 67 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை படிப்படியாக உயர்ந்து தற்போது 80 ரூபாயாக உயர்ந்தது.

புராட்டாசி விரதம் கடைப்பிடிப்பதால், விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில், நுகர்வு அதிகரித்து, கொள்முதல் விலை, 12 நாட்களில், 13 ரூபாய் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

புரட்டாசியை முன்னிட்டு, கோழிகள் அதிகம் விற்பனையாகாது என, பண்ணையாளர்கள் முடிவு செய்து, 10 சதவீதம் உற்பத்தியை குறைத்துள்ளனர். ஆனால், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில், கிலோ 90 முதல் 100 ரூபாய் வரை நிர்ணயித்துள்ளனர். அதனால், ஐதராபாத் கோழிகள், சென்னை வராமல், வட மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதனால், தமிழகத்தில் கறிக்கோழி விலை உயர்ந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News