செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி உத்தரவு

Published On 2019-09-23 11:49 GMT   |   Update On 2019-09-23 11:49 GMT
பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

பருவமழை முன்னேற்பாடு குறித்து தலைமைச் செயலர் தலைமையில் முப்படை ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல தேவையான உபகரணங்களுடன் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மழை காலங்களில் விழும் மரங்களை அகற்ற தேவையான ஆட்கள், இயந்திரங்கள் தயாராக இருக்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் போதுமான அளவில் இருப்பு வைத்துக்கொள்ளவும், அரசு, தனியார் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கவும், மருந்துகள் இருப்பு வைக்கவும் வேண்டும்.

பருவமழையின் போது தொற்றுநோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்க எடுக்க வேண்டும். மழைக் காலத்தில் உயிர்ச்சேதத்தை தவிர்க்க அனைத்துத் துறை செயலர்கள் ஒருங்கிணைந்து செயல்படவும், முன்னேற்பாடுகள் குறித்து அக்டோபர் திங்கள் முதல் வாரத்திலிருந்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். 

தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை வலுப்படுத்த கூடுதல் உபகரணங்கள் மற்றும் சிறப்புக் கருவிகளுக்காக ரூ.30.27 கோடியும், சென்னை மாநகராட்சிக்கு ரூ.7.25 கோடியும், மீன்வளத்துறைக்கு ரூ.1 கோடியும், மொத்தம் ரூ.38.52 கோடி ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளது.
Tags:    

Similar News