செய்திகள்
சென்னை மாநகராட்சி

விதிகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை - சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

Published On 2019-09-04 11:55 GMT   |   Update On 2019-09-04 11:55 GMT
சென்னை நகரில் விதிமுறைகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை: 

சென்னை மாநகராட்சி முழுவதும் முக்கிய சாலைகள், பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விதிமுறைகளை மீறி பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், விதிமுறைகளை மீறி பேனர் வைப்பவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி பேனர்கள் வைக்க வேண்டும். 2 நாட்களுக்கு முன் போலீசாரிடம் தடையில்லா சான்று வாங்க வேண்டும். பேனர்கள் வைப்பதற்கான அனுமதி கட்டணம் ரூ.200, காப்பீட்டு தொகை ரூ.50 செலுத்த வேண்டும். அனுமதி பெற்றதை விட அதிக பேனர்கள் வைத்தாலும் சட்ட விரோதமாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News