செய்திகள்
போராட்டம்

ரெயில்வே தனியார்மயத்தை எதிர்த்து தொடர் போராட்டம்- தொ.மு.ச. மாநில பொதுச்செயலாளர் அறிவிப்பு

Published On 2019-08-28 05:52 GMT   |   Update On 2019-08-28 05:52 GMT
ரெயில்வே பராமரிப்பு பணிமனைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படுவதை எதிர்த்து பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்று தொ.மு.ச. மாநில பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
திருச்சி:

தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினரும், தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளருமான சண்முகம் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து நிதித்துறை தடுமாறி வருகிறது. கடந்த ஜூன் மாதம் ரெயில்வே துறையில் சித்தரஞ்சன், ஐசிஎப்., பெங்களூரு, வாரணாசி, பாட்டியாலா உள்ளிட்ட 7 அரசு உற்பத்தி நிறுவனங்கள், அதை சார்ந்து காணப்படும் பொன்மலை உள்ளிட்ட 44 ரெயில்வே பராமரிப்பு பணிமனைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என ரெயில்வே துறை அறிவித்துள்ளது. இதை எதிர்த்து பல்வேறு ரெயில்வே தொழிற்சங்கங்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

ரெயில்வே துறை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தனியார் வசமானால் ரெயில்வே துறை நிச்சயம் நஷ்டத்தை சந்திக்கும். அதோடு பொருளாதாரத்தில் சரிவு ஏற்படும். எனவே ரெயில்வே துறை தனியார் வசம் என்பதை ஒரு போதும் ஏற்கமாட்டோம். இந்த நிலைப்பாட்டை அரசு கைவிட வேண்டும்.

இதற்கு எதிராக அனைத்து ரெயில்வே சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News