செய்திகள்
மழை

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை

Published On 2019-08-19 04:16 GMT   |   Update On 2019-08-19 04:16 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.
விழுப்புரம்:

வெப்பசலனம் காரணமாக விழுப்புரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கன மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளது. அங்கு இன்னும் தண்ணீர் வடியாத நிலையில் நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கன மழை நீடித்தது.

உளுந்தூர்பேட்டை, கண்டமங்கலம், வானூர், கள்ளக்குறிச்சி, செஞ்சி, கீழ்பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் பரவலாக மழை பெய்தது.

விழுப்புரம் நகர் பகுதியில் இன்று அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை 2 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இதனால் காலாநகர், சுதாகர் நகர் உள்ளிட்ட நகர் பகுதியில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நகர் பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால் அங்கு உள்ளவர்கள் ஓரளவு நிம்மதி அடைந்து உள்ளனர்.

கடலூர் நகர் பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. இன்று காலையும் மேகமூட்டமாக காணப்பட்டது.

பண்ருட்டி பகுதியாக காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம், மருங்கூர், கண்டரங்கோட்டை, அண்ணாகிராமம் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள், தோட்ட தொழிலாளர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News