செய்திகள்
சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயத்தின் விலை கடும் உயர்வு

Published On 2019-08-10 08:56 GMT   |   Update On 2019-08-10 08:56 GMT
சாரல் மழையால் சின்ன வெங்காயத்தின் விலை கடும் உயர்ந்துள்ளது. இன்னும் சில நாட்களுக்கு இதே நிலை தொடரும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் உள்ள வெங்காய மார்க்கெட்டுக்கு பல்வேறு கிராமங்களில் இருந்து தினந்தோறும் 2500 முதல் 3000 மூட்டைகள் வரை சின்ன வெங்காயம் வரும். இந்த வெங்காயம் பல்வேறு ஊர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். கடந்த 2 நாட்களாக சாகுபடி செய்து பறிப்புக்கு தயார் நிலையில் இருந்த வெங்காயம் சாரல் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காயத்தை பறித்து மார்க்கெட்டுக்கு கொண்டு வர முடியவில்லை.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ வெங்காயம் ரூ.45-க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.60 முதல் ரூ.65 வரை மார்க்கெட்டிலேயே வாங்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.80 மற்றும் அதற்கு மேலும் விற்பனையாகிறது.

பறித்த வெங்காயமும் ஈரப்பதம் காரணமாக விற்பனைக்கு கொண்டு வர இயலவில்லை. இதனால் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது என்றும் இன்னும் சில நாட்களுக்கு இதே நிலை தொடரும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News