செய்திகள்
மணல் கடத்தல்

தேவதானப்பட்டி அருகே வராக நதியில் மணல் திருடிய மாட்டு வண்டிகள் பறிமுதல்

Published On 2019-07-29 11:52 GMT   |   Update On 2019-07-29 11:52 GMT
தேவதானப்பட்டி அருகே வராக நதியில் மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் வழியாக வைகை அணையை சென்றடைகிறது வராக நதி. சோத்துப்பாறை, கும்பக்கரை பகுதியில் மழை பெய்யும்போது ஆற்றில் நீர்வரத்து இருக்கும்.

இதன்மூலம் அப்பகுதி யில் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது பருவமழை பொய்த்துப்போனதால் வராக நதியில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

இதனை பயன்படுத்தி சிலர் மணல் கடத்தி வருகின்றனர். ஏற்கனவே மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப் பட்டு விவசாயம் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே மணல் திருடுபவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுக்கள் வலியுறுத்தினர்.

ஜெயமங்கலம் சப்-இன்ஸ் பெக்டர் முத்தையா தலைமை யில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மாட்டு வண்டியில் மணல் திருடிய மேல்மங்கலத்தை சேர்ந்த சுரேஷ், வடுகபட்டியை சேர்ந்த முருகன் ஆகியோரை கைது செய்து மணலுடன் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News