செய்திகள்

பெரியாறு அணை நீர்பிடிப்பில் சாரல் மழை

Published On 2019-06-19 09:00 GMT   |   Update On 2019-06-19 09:00 GMT
வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் பெரியாறு, தேக்கடி பகுதியில் சாரல் மழை பெய்தது. பெரியாறு அணை நீர்மட்டம் 112.15 அடியாக உள்ளது.
கூடலூர்:

முல்லைபெரியாறு அணை மற்றும் தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவி வருகிறது. அவ்வப்போது மழை பெய்தபோதும் அணையின் நீர்மட்டம் உயராமலேயே உள்ளது. மேலும் வாயுபுயல் காரணமாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இதனால் கோடைகாலம் முடிந்தபோதும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. வெப்பக்காற்றும் வீசி வருகிறது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல்போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும். கடந்த 4 ஆண்டுகளாக குறைந்த மழையளவு காரணமாக நீர்திறப்பு தாமதமானது.

வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் பெரியாறு, தேக்கடி பகுதியில் சாரல்மழை பெய்தது. பெரியாறு அணை நீர்மட்டம் 112.15 அடியாக உள்ளது. 23 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

வைகை அணை நீர்மட்டம் 32.45 அடியாக உள்ளது. வரத்து இல்லை. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 60 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 35.90 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 80.85 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 14.8, தேக்கடி 0.2 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News