என் மலர்

  நீங்கள் தேடியது "Mullaperiyar Dam"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பேபி அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தமிழகம் வலியுறுத்தல்.
  • வள்ளக்கடவு வழியாக 5 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க அனுமதிக்க வேண்டும்.

  முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்புக் குழுவின் 16-வது கூட்டம் குழுவின் அதன் தலைவர் குல்சன்ராஜ் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, கண்காணிப்புக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கேரள அரசு சார்பிலும் அம்மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

  இந்த கூட்டத்தில், முல்லைப்பெரியாறு அணையை ஒட்டிய பேபி அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில், பேபி அணையின் கீழ் பகுதியில் இடையூராக உள்ள 15 மரங்களை வெட்டி அகற்ற அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தினார்கள்.

  அதைப்போல அணைப்பகுதிக்கு வள்ளக்கடவு வழியாக செல்ல 5 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்றும், முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவை கணக்கிட்டு, தமிழகத்துக்கு உரிய நீரை பகிர வேண்டும் என்றும் தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பேபி அணையை பலப்படுத்தும் பணிக்கு இடையூறாக உள்ள 13 மரங்களை அகற்ற கேரள வனத்துறை தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது
  • மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறையின் சார்பில் ஆய்வு நடத்தி மரங்களை அகற்றவும், வல்லக்கடவு சாலையை சீரமைக்கவும் உத்தரவிட வேண்டும்.

  கூடலூர்:

  தேனி மாவட்டம் பாரதிய கிசான் சங்க தலைவர் சதீஸ்பாபு, முல்லைச்சாரல் விவசாய சங்க நிர்வாகிகள் கொடியரசன், ஜெயபால், ராஜா உள்ளிட்டோர் தேக்கடியில் யானைகள் தின விழாவில் கலந்துகொண்ட மத்திய மந்திரி பூபேந்திரயாதவ், அஸ்வின் குமாரை சந்தித்தனர்.

  மேலும் அவர்களிடம் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் அவர்கள் குறிப்பிட்டு இருந்ததாவது:-

  கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்துவதற்கு பேபி அணையில் பராமரிப்பு பணிகள் செய்து 142 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ளலாம் என்றும், பின்னர் 2 அணைகளையும் பலப்படுத்தி 152 அடி வரை தண்ணீர் தேக்கி கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டது.

  ஆனால் பேபி அணையை பலப்படுத்தும் பணிக்கு இடையூறாக உள்ள 13 மரங்களை அகற்ற கேரள வனத்துறை தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது. வல்லக்கடவு தொடர்பு சாலையையும் பராமரிக்க அனுமதிக்கவில்லை.

  மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறையின் சார்பில் ஆய்வு நடத்தி மரங்களை அகற்றவும், வல்லக்கடவு சாலையை சீரமைக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மத்திய மந்திரி ஆவண செய்வதாக உறுதியளித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கேரளாவில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது.
  • வைகை அணை நீர்மட்டம் 61.68 அடியாக உள்ளது.

  கூடலூர்:

  152 அடி உயரமுள்ள முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

  கடந்த 2 வாரமாக கேரளாவில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீாமட்டம் 135.90 அடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 136 அடியை கடக்கும் என எதிர்பார்த்த நிலையில் மழை குறைந்ததால் நீர்வரத்தும் சரிய தொடங்கியது.

  அதன் பிறகு குறிப்பிடத்தக்க மழைபொழிவு இல்லை. இதனால் தற்போது அணையின் நீர்மட்டம் 134.35 அடியாக உள்ளது. நீர்வரத்து 1168 கனஅடி, திறப்பு 1972 கனஅடி, இருப்பு 5715 மி.கனஅடி.

  வைகை அணை நீர்மட்டம் 61.68 அடியாக உள்ளது. வரத்து 1750 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 3931 மி.கனஅடி.

  மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.80 அடி, வரத்து 21 கனஅடி, திறப்பு 10 கனஅடி, இருப்பு 335 மி.கனஅடி.

  சோத்துப்பாறை நீர்மட்டம் 70.53 அடி, திறப்பு 3 கனஅடி.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போலீசாரின் பல முக்கிய ரகசிய விபரங்கள் போலீஸ் நிலைய கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டு இருந்தது.
  • போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் அலியார், ரியாஸ், அப்துல் சமது ஆகிய 3 பேரும் இந்த தகவல்களை திருடியது உறுதியானது.

  கூடலூர்:

  கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே உள்ள கரிமன்னூர் போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தவர் அனஸ். இவர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் குறித்த ரகசிய விபரங்களை போலீஸ் நிலையத்தில் இருந்த கம்ப்யூட்டரில் திருடி பயங்கரவாத தொடர்பில் இருந்த ஒரு இயக்கத்துக்கு கொடுத்ததாக புகார் எழுந்தது.

  அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பயங்கரவாத இயக்கத்துக்கு ரகசிய விபரங்களை அனஸ் கொடுத்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.

  மூணாறு போலீஸ் நிலையத்தில் இருந்தும் சில முக்கிய ரகசிய விபரங்கள் பயங்கரவாத இயக்கத்துக்கு கொடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த மூணாறு டி.எஸ்.பி. மனோஜூக்கு அப்போதைய எஸ்.பி. கருப்பசாமி உத்தரவிட்டார். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

  போலீசாரின் பல முக்கிய ரகசிய விபரங்கள் போலீஸ் நிலைய கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டு இருந்தது. இதனை கடந்த மே மாதம் 15-ந் தேதி தங்களது செல்போனில் பதிவு செய்ததும் கண்டறியப்பட்டது. அதே போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் அலியார், ரியாஸ், அப்துல் சமது ஆகிய 3 பேரும் இந்த தகவல்களை திருடியது உறுதியானது.

  இதனையடுத்து தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கம்ப்யூட்டரில் இருந்த ரகசிய விபரங்களை திருடி பயங்கரவாத அமைப்பினருக்கு வழங்கியது உறுதி செய்யப்பட்டது. இதில் அலியார் என்பவர் பல மாதங்களாக முல்லைப்பெரியாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர். எனவே இவர் பெரியாறு அணையின் பாதுகாப்பு ரகசியங்கள் குறுத்தும் பயங்கரவாத அமைப்பினருக்கு வழங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

  3 பேர் மீது நடவடிக்கை எடுக்கும்படி இடுக்கி மாவட்ட எஸ்.பி.யிடம் டி.எஸ்.பி. மனோஜ் அறிக்கை தாக்கல் செய்தார். இதனையடுத்து 2 பேர் எர்ணாகுளம் மாவட்டத்துக்கும், ஒருவர் கோட்டயம் மாவட்டத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தும் பட்சத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 146 அடி வரை தேக்கப்படுகிறது.
  • தொடர்மழை காரணமாக வைகை அணை நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

  கூடலூர்:

  கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் 130.85 அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 133 அடியாகவும், இன்று காலை 135 அடியாகவும் உயர்ந்துள்ளது. 2 நாளில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 146 அடி வரை தேக்கப்படுகிறது. அணைக்கு விநாடிக்கு 6700 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1867 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் 13 ஷட்டர்களுக்கு முன்பு உள்ள தண்ணீர் கடல்போல் காட்சியளிக்கிறது. பகல் பொழுதில் வெயில் அடித்த போதிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் அணைக்கு வரும் நீர்வரத்து, மழையளவு, வெளியேறும் கசிவுநீர் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

  தொடர்மழை காரணமாக வைகைஅணை நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் உள்ள அணையின் தற்போதைய நீர்மட்டம் 56.96 அடியாக உள்ளது. வரத்து 1823 கனஅடி, திறப்பு 969 கனஅடி, இருப்பு 3046 மி.கனஅடி.

  மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடியாகவும், சோத்துப்பாறை நீர்மட்டம் 71.34 அடியாகவும், உள்ளது.

  பெரியாறு 52.6, தேக்கடி 21.2, கூடலூர் 3, உத்தமபாளையம் 1.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முல்லைபெரியாறு அணையிலிருந்து 1789 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
  • பெரியாறு 84.6, தேக்கடி 31.2, கூடலூர் 14.2, உத்தமபாளையம் 2.6 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

  கூடலூர்:

  முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று 5258 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 8143 கனஅடியாக அதிகரித்துள்ளது. 152 அடி உயரம் உள்ள முல்லைபெரியாறு அணையில் தற்போது 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 130.85 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 133.20 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 2 அடி அதிகரித்திருப்பதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

  அணையிலிருந்து 1789 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்இருப்பு 5446 மி.கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களும் இயக்கப்பட்டு 150 மெகாவாட்டுக்கு அதிகமாக மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.

  71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 56.55 அடியாக உள்ளது. வரத்து 1695 கனஅடி, திறப்பு 969 கனஅடி, நீர் இருப்பு 2975 மி.கனஅடி.

  மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடி, சோத்துப்பாறை நீர்மட்டம் 72.32 அடி, திறப்பு 6 கனஅடி.

  பெரியாறு 84.6, தேக்கடி 31.2, கூடலூர் 14.2, உத்தமபாளையம் 2.6 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடியாக உள்ளது. 20 கன அடி நீர் வருகிறது.
  • மழை பெய்து வருவதால் விவசாயிகள் மும்முரமாக விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

  கூடலூர்:

  பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில் முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் தேனி மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

  கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக நெல் சாகுபடிக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கடந்த சில நாட்களாக 900 கன அடி நீர் திறக்கப்படுகிறது. குடிநீருக்காக 100 கன அடி என மொத்தம் 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

  அணையின் நீர்மட்டம் 127.75 அடியாக உள்ளது. 799 கனஅடி நீர் வருகிறது. மழை பெய்து வருவதால் விவசாயிகள் மும்முரமாக விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அணையின் நீர்மட்டம் உயரும்பட்சத்தில் குடிநீர் மற்றும் நெல் சாகுபடிக்கு தொடர்ந்து தண்ணீர் தடையின்றி கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

  மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடியாக உள்ளது. 20 கன அடி நீர் வருகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 82.20 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 6 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

  பெரியாறு 29.6, தேக்கடி 28.2, கூடலூர் 3.8, உத்தமபாளையம் 0.8., வீரபாண்டி 2.8, அரண்மனைபுதூர் 5.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.30 அடியாக உள்ளது.
  • கூடலூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் இன்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

  கூடலூர்:

  முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தேக்கடியில் உள்ள ஷட்டர் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

  இந்த நீர் 2 கி.மீ தூரம் உள்ள சுரங்கப்பாதை வழியாக சென்று குமுளி மலைப்பாதை அருகே போர்பே அணையில் சேரும். அங்கிருந்து தமிழக பகுதிக்கு மின் உற்பத்திக்காக ராட்சத குழாய் மூலமும், இரைச்சல் பாலம் வழியாகவும் வெளியேற்றப்படும்.

  இந்த அணையின் பராமரிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக நீர்பாசனத்துறை தலைமை பொறியாளர் ஞானசேகர், கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், பெரியாறு வைகை செயற்பொறியாளர் அன்புச் செல்வன், பெரியாறு அணை செயற்பொறியாளர் ஷாம் இர்வின், உதவி பொறியாளர் ராஜகோபால் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

  தற்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

  முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.30 அடியாக உள்ளது. வரத்து 88 கன அடி. திறப்பு 700 கன அடி. இருப்பு 4590 மி.கன அடி.

  வைகை அணை நீர்மட்டம் 54.66 அடி. வரத்து 286 கன அடி. திறப்பு 869 கன அடி. இருப்பு 2664 மி. கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.70 அடி. வரத்து 58 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 85.44 அடி. வரத்து 15 கன அடி, திறப்பு 6 கன அடி.

  லோயர்கேம்ப், கூடலூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் இன்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
  • இன்று காலை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.60 அடியாக உள்ளது.

  கூடலூர்:

  தமிழக-கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. இருபோக நெல்சாகுபடிக்கு ஆதாரமாக உள்ளது.

  இந்த ஆண்டு போதிய அளவு நீர்மட்டம் இருந்ததால் வழக்கம்போல் ஜூன் 1ந் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மழை குறைந்துள்ளதால் அணையின் நீர்மட்டமும் சரிந்து வருகிறது. இந்த நிலையில் அணையில் தமிழக நீர்பாசனத்துறை தலைமை பொறியாளர் ஞானசேகர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

  மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதி, நீர் கசிவு கேலரி உள்ளிட்ட இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அணையின் நீர்மட்டத்திற்கு ஏற்ப கசிவு நீர் அளவு சரியாக உள்ளதா? என்பதையும் கண்காணித்தனர்.

  அப்போது கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், செயற்பொறியாளர் சாம்இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர்கள் ராஜகோபால், ரேவதி, நவீன்குமார், பரதன், பிரவீன்குமார் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

  பருவமழை தாமதமாகி வரும் நிலையில் தமிழக அதிகாரிகள் அணையில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நேற்று தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

  இன்று காலை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.60 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 525 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 56.84 அடி. வரத்து இல்லை. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44 அடி. 73 கனஅடி நீர் வருகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.67 அடியாக உள்ளது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

  பெரியாறு 6.2. தேக்கடி 3.4, கூடலூர் 9.6, ஆண்டிபட்டி 31, அரண்மனைபுதூர் 6.6, போடி 20.6, மஞ்சளாறு அணை 4, சோத்துப்பாறை 3, வீரபாண்டி 14, உத்தமபாளையம் 4.3, வைகை அணை 4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பருவமழை மற்றும் கோடை மழை கைகொடுத்ததால் முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் சீராக உயர்ந்தது.
  • வைகை அணையிலும் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

  கூடலூர்:

  பருவமழை மற்றும் கோடை மழை கைகொடுத்ததால் முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் சீராக உயர்ந்தது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி நெல்சாகுபடி பாசனத்துக்காக 1ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

  இதே போல் வைகை அணையிலும் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது மழை குறைந்துள்ள நிலையில் அணைக்கு நீர் வரத்து சரிந்துள்ளது. இருந்தபோதும் தண்ணீர் திறப்பு நேற்று முதல் அதிகரிக்கப்பட்டது. 136 கன அடி நீர் வருகிற நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 132.05 அடியாக உள்ளது. வைகை அணையின் நீர் மட்டம் 61.25 அடியாக உள்ளது. வரத்து இல்லை. அணையில் இருந்து பாசனம் மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 669 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

  மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 40.50 அடியாக உள்ளது. 75 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 89.38 அடி. வரத்து இல்லாத நிலையில் 6 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணை 10.2, சோத்துப்பாறை 0.5 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

  முல்லைப்பெரியாறு அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை பொறுத்து லோயர் கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களை கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 300 கன அடி நீர் திறக்கப்பட்டபோது 1 ஜெனரேட்டர் மூலம் 27 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. நேற்று நீர் திறப்பு 400 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் மின் உற்பத்தியும் 36 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு திறக்கப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டதால் அணையின் நீர் மட்டம் இன்றோ அல்லது நாளையோ 142 அடியை எட்டும் நிலையில் உள்ளது.
  கூடலூர்:

  முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த 1 மாதமாக கன மழை பெய்து வருகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பே 142 அடியை எட்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் உச்சநீதிமன்றத்தில் தமிழக, கேரள அரசுகள் ஒத்துக்கொண்ட ‘ரூல் கர்வ்’ நடைமுறைப்படி நவம்பர் 20-ந் தேதி முதல் 141 அடிக்கு மேலும் 30-ந் தேதி 142 அடி வரை தேக்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

  அதன்படி கடந்த 10 நாட்களாக 141 அடிக்கு மேல் தண்ணீர் நிலை நிறுத்தப்பட்டு 142 அடியை எட்டாத வகையில் தொடர்ந்து கேரள பகுதிக்கு உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

  இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 141.90 அடியாக உள்ளது. அணைக்கு 2232 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1867 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை சற்று குறைந்திருந்த போதிலும் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் இன்று மாலை அல்லது நாளை அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டும் என விவசாயிகள் நம்பிக்கையடைந்துள்ளனர். நீர் இருப்பு 7639 மி.கன அடியாக உள்ளது.

  உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பெரியாறு அணையின் நீர்மட்டம் 4-வது முறையாக தற்போது 142 அடியை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  இதே போல தேனி மாவட்டத்திலும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பெய்த கனமழை காரணமாக அணையின் நீர் மட்டம் கடந்த 9-ந் தேதி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் 58-ம் கால்வாய் பாசனத்துக்கும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

  71 அடி உயரமுள்ள அணையின் நீர் மட்டம் தற்போது 69.72 அடியாக உள்ளது. நீர் வரத்து 1805 கன அடி. திறப்பு 1772 கன அடி. நீர் இருப்பு 5758 மி.கன அடி.

  பெரியாறு 4.4, தேக்கடி 2, கூடலூர் 5.3, வீரபாண்டி 2, வைகை அணை 1, கொடைக்கானல் 23 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo